Feb 28, 2025 05:25 PM

தனுஷின் ‘குபேரா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

தனுஷின் ‘குபேரா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம், இந்திய சினிமாவில் முத்திரை பதிக்கும் திரைப்படமாக இருக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

 

ஆழமான, குணச்சித்திர கதாபாத்திரங்கள் மூலம் நகரும் கதைகளுக்கு பெயர் பெற்ற சேகர் கம்முலா புதிய படைப்பு பிராந்தியத்திற்குள் நுழைந்து, இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக குபேரா-வை மாற்றியுள்ளார்.

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுனில் நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் மேற்பார்வையில் குபேரா அதிகபட்ச பொருட்செலவில் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி பிரமாண்டமான பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், குபேரா படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும்  ஜூன் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘குபேரா’ வெளியாக உள்ளது.