Jan 04, 2022 07:39 AM

தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனுஷை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்திற்கு தமிழில் ‘வாத்தி’ என்றும் தெலுங்கில் ‘சார்’ (SIR) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், ‘வாத்தி’ திரைப்படத்தின் துவக்க விழா ஐதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் பூஜையுடன் நடைபெற்றது. இதில், இயக்குநர் திரிவிக்ரம், தயாரிப்பாளர்கள் கே.எல்.நாராயணா, எம்.எல்.குமார் சௌத்ரி, எஸ்.ராதாகிருஷ்ணா, சுரேஷ் சுக்கப்பள்ளி, நர்ரா ஸ்ரீனிவாஸ் மற்றும் மகேந்திரா (MD, பிரகதி பிரிண்டர்ஸ்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

திரைக்கதையை ஹாரிகா அண்ட் ஹாசினி கிரியேஷன்ஸின் எஸ் ராதாகிருஷ்ணா (Chinnababu) குழுவினரிடம் ஒப்படைத்தார், படத்தின் முதல் கிளாப்பை திரிவிக்ரம் அடிக்க, சுரேஷ் சுக்கப்பள்ளி கேமராவை இயக்கினார்.

 

சூர்யதேவரா நாக வம்சியின்  சித்தாரா  என்டர்டெயின்மெண்ட்ஸ் இந்தப் படத்தை சாய் சௌஜன்யாவுடன் (ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்) தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாய் குமார், தணிகெல்லா பரணி மற்றும், நர்ரா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட  பலர் நடிக்கிறார்கள். 

 

Vaatthi

 

சூது கவ்வும், சேதுபதி, தெகிடி, மிஸ்டர் லோக்கல், மாறா போன்ற படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் நவின் நூலி இப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறர்.

 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை (ஜனவரி 5) முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது.