கல்கியின் கதைக்கு குரல் கொடுத்த இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்
மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் எஸ்.எஸ். மேனகா, தமிழ் இலக்கியங்களில் முக்கியமான சிறுகதைகளில் ஒன்றாகும். இந்த சிறுகதைகளின் சிறப்பம்சம் என்னவென்றால், சமகாலத்திற்கும் பொருந்தும் வகையில் கதைகளம் கொண்டதாக இருக்கின்றன. பயணப்படுவர்களை கதை மாந்தர்களாக கொண்ட எஸ்.எஸ்.மேனகாவில், படிப்பவர்களையும் உடன் அழைத்து செல்லும் வகையில் கதை சொல்லப்பட்டிருக்கும். பிரிந்த காதலர்கள் மீண்டும் சேர்ந்தார்களா என்பதே எஸ்.எஸ் மேனகா!
இந்த நிலையில், கல்கியின் எஸ்.எஸ்.மேனகா, ஸ்டோரி டெல் ஆடியோ இணையதளத்தில், ஒலி வடிவில் பிரத்யேகமாக வெளியாகியுள்ளது. இதற்கு பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் குரல் கொடுத்துள்ளார்.
முதல் முறையாக ஒலி வடிவ கதைக்கு குரல் கொடுத்திருப்பது பற்றி கூறிய இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ”கல்கியின் கதை சொல்லும் மொழி புலமையை ரசித்தேன். அதனால், இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.” என்றார்.
2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்டோரிடெல் நிறுவனம், ஸ்டாக் ஹோமை தலமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. சர்வதேச அளவில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்டோரி டெல் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.