Oct 25, 2017 06:11 AM

அதர்வாவுக்கு ஜோடி தேடும் இயக்குநர்!

அதர்வாவுக்கு ஜோடி தேடும் இயக்குநர்!

கெளதம் கார்த்திக்கை வைத்து ‘இவன் தந்திரன்’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த ஆர்.கண்ணன், அடுத்ததாக அதர்வாவுடன் கைகோர்த்துள்ளார். 

 

கமர்ஷியல் ஆக்‌ஷன்  படமாக உருவாகும் இப்படம் குறித்து இயக்குநர் ஆர்.கண்ணன் பேசுகையில், “இது ஒரு மிக விறுவிறுப்பான சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்டாகும். எல்லா கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு ஆக்ஷன் ட்ராமா இது. கதாநாயகனாக அதர்வா நடிக்க உள்ளதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த கதாபாத்திரத்திற்கு அதர்வா மட்டுமே  மிக பொருத்தமாக இருப்பார். அவரது சினிமா பயணத்தில் இது ஒரு ஸ்பெஷல் படமாக நிச்சயம் இருக்கும். எல்லா தரப்பட்ட கதைகளிலும் ஜொலிப்பவர் என பெயரெடுத்துள்ள அதர்வா இப்படத்திற்கு பலமாக இருப்பார். கதாநாயகி மற்றும் மற்ற துணை கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம். கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளோம்.” என்றார்.

 

மாபெரும் வெற்றிப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்கு படத்திற்கு இசையமைத்த ரதன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா மிக்ஸ் நிறுவனமும் எம்.கே.ராம்பிரசாத்தின் எம்.கே.ஆர்.பி நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.