’டப்பாங்குத்து’ திரைப்பட முதல் பார்வை போஸ்டர் வெளியானது!
நாட்டுப்புற கலைகளை கெளரவப்படுத்தும் விதமாகவும், அக்கலைகளின் பெருமைகளை மக்களிடம் சேர்க்கும் விதமாகவும் உருவாகி வரும் படம் ‘டப்பங்காத்து’. நாட்டுப்புற பாடல்கள் வழங்கும் இப்படத்தில் 15 வகையான நாட்டுப்புற பாடல்கள் ஆடி, பாடி மகிழ இடம் பெற்றுள்ளன.
பெரிய பட்ஜெட் படங்களுக்கு எப்படி முதல் பார்வை போஸ்டர் மிகப்பெரிய அளவில் வெளியிடப்படுகிறதோ, அதுபோல் ‘டப்பாங்குத்து’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் அக்டோபர் 2 (நேற்று) வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த போஸ்டர் 72 லட்சம் பேர் சப்க்ரைபர் கொண்ட தமிழ் சினிமா யூடியூப் சேனலில் முதல் முறையாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஜெகநாதன் தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எஸ்.டி.குணசேகரா எழுத, முத்து வீரா இயக்கியுள்ளார். சரவணன் இசையமைக்க, ராஜா கே.பக்தவச்சலம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீனா நடனம் காட்சிகளை வடிவமைக்க, எம்.சிவாயாதவ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். டி.எஸ்.லக்ஷ்மண் படத்தொகுப்பு செய்ய, ஆக்ஷன் பிரகாஷ், நாதன் லீ ஆகியோர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றனர். எஸ்.செல்வரகு மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.