எலான் மஸ்கின் எக்ஸ் பதிவு! - உலக அளவில் பிரபலமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்
உலக அளவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், அரசியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல விசயங்கள் பற்றி தனது கருத்தை கலாய்க்கும் வகையில் வெளியிடுவது வழக்கம். இவருடைய பதிவுகள் அனைத்தும் உலக அளவில் பிரபலமடைவதும் வழக்கம். அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றி எலான் மஸ்க் வெளியிட்ட பதிவு ஒன்றின் மூலம் நடிகரும், தயாரிப்பாளருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் உலகளவில் பிரபலமடைந்துள்ளார்.
‘தப்பாட்டம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான துரை சுதாகர், ‘களவாணி 2’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர், தொடர்ந்து ‘க.பெ ரணசிங்கம்’, ‘டேனி’, ‘பட்டத்து அரசன்’ உள்ளிட்ட பல படங்களில் பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தவர், தற்போது பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றி பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவை புகைப்படம் மூலம் விளக்கும் விதமாக, பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நாயகனாக நடித்த ‘தப்பாட்டம்’ படத்தின் புகைப்படத்தை எலான் மஸ்க் பயன்படுத்தியுள்ளார்.
பொதுவாக திரைப்படங்களில் காதலும், காதலியும் ஒரு குளிர்பானத்தில், இரண்டு ஸ்டாக்களை பயன்படுத்தி குடுப்பது போன்று தான் காட்டுவார்கள். ஆனால், ‘தப்பாட்டம்’ படத்தில், நாயகி இளநீரை நேரடியாக உறிஞ்ச, நாயகியின் வாயில் இருந்து நாயகன் உறிஞ்சுவது போல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை தான் எலான் மஸ்க், தனது கருத்தை விவரிக்கும் புகைப்படமாக பயன்படுத்தியிருக்கிறார்.
எலான் மஸ்க், தமிழ் திரைப்படத்தின் புகைப்படத்தை பயன்படுத்தியதை தொடர்ந்து பல பிரபலங்கள் இந்த புகைப்படத்தை ரீ போஸ்ட் செய்து வருவதோடு லைக்கும் செய்து வருகிறார்கள். அதேபோல், ரசிகர்களும் இந்த புகைப்படத்தை வைரலாக்கி துரை சுதாகாரை கொண்டாடி வருகிறார்கள்.
எலான் மஸ்கின் இந்த ஒரு ட்வீஸ் மூலம் நடிகர் துரை சுதாகர் உலகம் முழுவதும் பிரபலமடைந்திருப்பதை, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதேபோல், நடிகர் துரை சுதாகாரும், தனது படத்தின் புகைப்படத்தை பகிர்ந்த எலான் மஸ்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
— Elon Musk (@elonmusk) June 10, 2024