Dec 31, 2017 03:08 PM

வில்லன் வேடம்தான் வெளியே தெரிய வைக்கும் மதுபானக்கடை ரவி

வில்லன் வேடம்தான் வெளியே தெரிய வைக்கும்  மதுபானக்கடை ரவி

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து நல்ல பெயர் வாங்குவது எளிது. குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பேர் வாங்குவது ரொம்பவும் கஷ்டம். அந்த வகையில்; சமீபகாலமாக குணச்சித்திர வேடத்தில் நடித்து கைதட்டல் வாங்கி வருகிறார். ரவி மதுபானக்கடை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்ததால் மதுபானக்கடை ரவி என்றால் கோடம்பாக்கம் முழுக்க தெரிகிறது. ஆரம்பத்தில்  காமதேனு  மசாலா என்ற பெயரில் மசாலா பாக்கெட்  தொழிலில் ஈடுபட்டிருந்த ரவி இன்று சினிமாவில் மசாலா காதாபாத்திரங்களில் திறமை காட்டி வருகிறார்.

 

சீரியல் முதல் சினிமா வரைக்கும் இரட்டைக் குதிரையில் பறந்து கொண்டிருக்கும் ரவி  சினிமாவில் ஜெயித்த கதையை கூறினார்.

 

”சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நாடகங்களில் நடித்து வந்தேன். கோமல் சுவாமிநாதன் நாடகங்களில் நடித்து வந்தேன். சங்கீத பைத்தியங்கள், இருட்டில் தேடாதீர்கள், போன்ற நாடகங்கள் முக்கியமானது.

 

இன்னமும் கூட தண்ணீர் தண்ணீர் நாடகம் போடப்பட்டு வருகிறது. அதில் நடித்துக் கொண்டிருக்கிறேன். தியேட்டர் லேப், ஸ்டேஜ் ப்ரண்ட்ஸ் போன்ற கம்பெனியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  இதே போல நூற்றுக்கும் மேற்ற நாடகங்கள் நடித்துக்கொண்டிருந்தேன். இந்த அனுபவத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடத்தொடங்கினேன். அப்போது ராதிகா வெள்ளைத்தாமரை  டிவி சீரியல் எடுத்துக்கொண்டிருந்தார்.  நண்பர்கள் மூலம் அவரின் அறிமுகம் கிடைத்தது. முதல்ல  என்னைப்பார்த்தவர் முதலில் ஒரு மானிட்டர் எடுத்து விடலாம் என்று கூறினார். பனிரெண்டு பக்க வசனத்தை நான் எளிதாக பேசுவதைப்பார்த்து விட்டு வேண்டாம் நேரே ஷாட்டுக்கு போகலாம் என்று கூறினார். நாடக நடிகர்கள் மீது அப்படியொரு நம்பிக்கை. தொடர்ந்து ருத்ரம், சரவணன் மீனாட்சி தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன்.

 

பிறகு மதுபானக்கடை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படம் எனக்கு அடையளத்தைக் கொடுத்தது.

 

தொடர்ந்து பாஸ் எ பாஸ்கரன், காதல் சொல்ல வந்தேன், ஹரிதாஸ், சண்டியர், இசை, சண்டமாருதம், சண்டிவீரன்,  கட்டப்பாவக் காணோம், அரிமாநம்பி, கபாலி, பங்களில் நடித்தேன் தற்போது சண்டைகோழி 2 வண்டி போன்ற படங்களில்  நடித்து வருகிறேன். இதில் வண்டி படம் வித்தியாசமான கதைக்களம் கொண்டது. கவனிக்கூடிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. இதில் வில்லன் பாத்திரம் கூட விதிவிலக்கல்ல. சினிமாவில் நெகடிவ் கதாபாத்திரங்கள் தான் ரசிகர்கள் மனதில் முதல் பதிவாகிறது. அதனால் வில்லன் கதாபாத்திரம் நடிப்பதில் லாபம் தான் என்றார் மதுபானக்கடை ரவி.