Mar 26, 2022 02:12 PM

இயக்குநரை ஏமாற்றி கதையை கெடுத்த ’இடியட்’ தயாரிப்பாளர்!

இயக்குநரை ஏமாற்றி கதையை கெடுத்த ’இடியட்’ தயாரிப்பாளர்!

சந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு’ மற்றும் ‘தில்லுக்கு துட்டு 2’ என்ற இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் ‘இடியட்’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து இரண்டு ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநரின் படம் என்பதால், படத்திற்கு கொஞ்சம் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், இயக்குநரின் திடீர் குமுறலால், எதிர்ப்பார்த்த ரசிகர்களை படம் வெளியாவதற்கு முன்பே ஏமாற்றம் அடைய செய்துவிட்டது.

 

அதாவது, ‘இடியட்’ படத்தின் கதை இயக்குநர் ராம்பாலா தான் என்றாலும், அவரே இல்லாமல் இந்த படம் உருவாகி விட்டதாம். அதோடு, படம் முடிந்த உடன் அவரை கேட்காமலே படத்தின் பல வேலைகளை செய்த தயாரிப்பு தரப்பு, இப்போது ரிலீஸ் வரை கொண்டு வந்துவிட்டதாம்.

 

இதனால், கடுப்பான இயக்குநர் ராம்பாலா, ‘இடியட்’ தயாரிப்பாளரின் இடியட்டான செயல் குறித்து சோசியல் மீடியாவில் விமர்சித்து வருகிறார்.இது குறித்து இயக்குந ராம்பாலா வெளியிட்டு பதிவுகளில், ”ஒருவன் தன் குறையை தானே அறியப்பட வேண்டும் அல்லது மற்றவர்களால் அறியப்பட வேண்டும். அதை அறியாதவன் அஃறினையாக இருக்க வேண்டியது தான்”

 

”படிப்பதும் சிந்திப்பதும் வேறு வேறு , சிந்திப்பவன் சிறந்தவன் ஆகின்றான் படித்தவன் சிந்திப்பவனை குறை சொல்லி காலம் தள்ளுவான்.”

 

”நான் தேவை இல்லை என்ற நிலையில் நீங்கள் மேதாவி என நினைத்து என் படைப்பில் கை வைத்தப் பிறகு, என்னுடைய பெயர் மட்டும் உங்களுக்கு தேவையா ? அதையும் எடுத்து விடுங்கள். எப்போதும் குற்றமுள்ள நெஞ்சம் உங்களை குறுகுறுக்கச் செய்யும். அழுததற்கும் கெஞ்சியதற்கும் பலன் இல்லாதபோது நான் என்ன செய்ய ?” என்று தெரிவித்து தனது மன குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இயக்குநர் ராம்பாலாவின் படைப்பை இப்படி பந்தாடி ‘இடியட்’ படத்தை எடுத்திருக்கும் ஸ்கிரீன் சீன் தயாரிப்பு நிறுவனம், படத்தில் பணிபுரிந்ததற்காக எந்த ஒரு ஊதியமும் இயக்குனருக்கு வழங்கப்படவில்லையாம்.

 

மொத்தத்தில், ‘இடியட்’ படம் வெற்றி இயக்குநர் ராம்பாலா பெயரில் வந்தாலும், அவருடைய படம் போல் இருக்காதாம்.