அறிமுக நடிகர் பாலாஜி மூன்று வேடங்களில் நடித்திருக்கும் ‘ஜம்பு மஹரிஷி’! - ஏப்ரல் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
டிவிஎஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பூ.பாலாஜி தயாரித்து இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஜம்பு மஹரிஷி’. விவசாயிகளின் துயரமான வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள ஜம்பு மஹரிஷி கதையோடு சேர்த்து சொல்லியிருக்கிறார்கள்.
ஜம்பு மஹரிஷி, ருத்ரவீரன் மற்றும் விவசாயி என மூன்று வேடங்களில் நடித்திருக்கும் பாலாஜி, ஒவ்வொரு வேடத்திற்கும் தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வேறுபாட்டை காட்டி அசத்தியிருக்கிறார். முதல் படம் போல் அல்லாமல் முன்னனி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கும் பாலாஜி, இப்படத்திற்காக பல இன்னல்களை எதிர்கொண்டு தற்போது படத்தை வெளியீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் ராதாரவி, பாகுபலி பிரபாகர், பாண்டு உள்ளிட்ட மூத்த நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.
தேவா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், தற்போது டிரைலரும் வெளியாகி மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில், வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் ‘ஜம்பு மஹரிஷி’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை தயாரிப்பாளரும் இயக்குநருமான பாலாஜி இன்று அறிவித்தார்.
இது தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் பாலாஜி, “விவசாய குடும்பங்கள் எப்படி அழிகின்றன. அவர்களின் அழிவுக்கு கடன் பிரச்சனை மிக முக்கிய பிரச்சனையாக இருக்கிறது, போன்ற விஷ்யங்களை இப்படத்தில் சொல்லியிருக்கிறேன். முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், அதை புராண கதையோடு சேர்த்து சொல்வது புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
இந்த நேரத்தில் விவசாயிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொல்ல விரும்புகிறேன். எப்படிப்பட்ட கஷ்ட்டம் வந்தாலும் விவசாய நிலங்களை விற்று விடாதீர்கள். நம் பாட்டன், முப்பாட்டனுக்கும் இப்படி பல கஷ்ட்டங்கள் வந்தன. அவர்கள் யாரும் நிலங்களை விற்கவில்லை, மாறாக கடுமையாக உழைத்து கஷ்ட்டத்தில் இருந்து மீண்டார்கள். அதுபோல், நீங்களும் கடினமாக உழையுங்கள், கூலி வேலைக்கு செல்லுங்கள், ஆனால் எந்த காரணத்திற்காகவும் நிலங்களை விற்காதீர்கள்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்த தருணத்தில் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் பல நல்ல விஷயங்களையும், மக்கள் பணிகளையும் செய்து வருகிறீர்கள், அதுபோல் மீண்டும் கல்லுக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். அப்படி செய்தால் விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும்.
சில விவசாயிகள் 10 பனை மரம், தென்னை மரம் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அந்த மரங்களை வெறும் 50 ரூபாய்க்கு செங்கல் சூளைகளுக்கு விற்று விடுகிறார்கள். ஆனால், கல்லுக்கடை திறந்தால் அந்த விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதோடு, அவர்கள் பனை மரங்களும் அழியாமல் இருக்கும். எனவே, முதல்வர் இதை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
‘ஜம்பு மஹரிஷி’ படத்திற்காக நான் பல கஷ்ட்டங்களை சந்தித்து இப்போது படத்தை வெளியீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறேன். சினிமாவில் எல்லாமே கமிஷன் தான். இயக்குநர்கள் அலுவலகங்களை போட்டுக்கொண்டு, அவர்களுடைய ஆட்களை அனைத்து பணிகளிலும் அமர்த்தி அனைவரிடமும் கமிஷன் வாங்க்கிறார். நம் கண் முன்னே இது நடந்தாலும் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. பெரிய தயாரிப்பாளர்கள் இதை தாங்கினாலும் சிறிய தயாரிப்பாளர்கள் நிலையை நினைத்து பாருங்கள்.
தற்போது தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வருகிறது. இந்த தேர்தலுக்கு பிறகாவது தயாரிப்பாளர்கள் சங்கம், சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு பல உதவிகளை செய்வதோடு, கமிஷன் வேட்டை நடத்தும் சினிமாக்காரர்களிடம் இருந்து அப்பாவின் தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.