‘கொரில்லா’வுக்கு பூஜை போட்ட ஜீவா!
’சங்கிலி புங்குலி கதவதொற’ படத்திற்கு பிறகு ஜீவாவின் நடிப்பில் ‘கீ’ மற்றும் ‘கலகலப்பு 2’ என இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாக உள்ளது. இப்படங்களை தொடர்ந்து ஜீவா அடுத்து நடிக்கும் படத்திற்கு ‘கொரில்லா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு மட்டும் அல்ல, பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ஜிம்பான்ஜி குரங்கு ஒன்றும் இப்படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கின்றது.
‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, சதீஷ், முனிஷ் காந்த், யோகி பாபு, முட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டான் சாண்டி இயக்குகிறார். சாம் சி.எஸ் இசையமைக்க, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். வெற்றி மகேந்திரன் ஒள்ளிபதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் பாண்டிச்சேரியில் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஒரு மாதம் தாய்லாந்தில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஏப்ரல் மாதத்திற்குள் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ள தயாரிப்பு தரப்பு, இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிடவும் முடிவு செய்துள்ளது.