Mar 24, 2021 02:50 AM

’தலைவி’ டிரைலர் வெளியீட்டு விழாவில் கண்கலங்கிய கங்கனா ரணாவத்!

’தலைவி’ டிரைலர் வெளியீட்டு விழாவில் கண்கலங்கிய கங்கனா ரணாவத்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ’தலைவி’ என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகியுள்ளது. விஜய் இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.

 

வைப்ரி மோசன் பிக்சர்ஸ், கர்மா மீடியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ், கோதிக் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங், ஸ்பிரிண்ட் பிலிம்ஸ் ஹிதேஷ் தக்கர், திருமால் ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.

 

இப்படத்தின் மூன்று மொழிகளுக்கான டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி உள்ளிட்ட படக்குழுவினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகை கங்கனா ரணாவத், “’தலைவி’ திரைப்படத்திற்காக முதலில் என்னை அணுகிய போது முதலில் நடிக்க தயங்கியனேன். பிறகு இயக்குநர் விஜய் தான் வற்புறுத்தி ஒப்புக் கொள்ள வைத்ததார். மேலும் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு அரவிந்த்சாமி மாதிரியான ஒரு ஹீரோ அளித்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது. பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எனக்கு கொடுக்கப்பட்டதே இல்லை தலைவி படத்தில் இயக்குநர் விஜய் என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தினார். என் திறமைக்கு மதிப்பளித்தார்.” என்று கூறி கண்கலங்கினார். பிறகு தொடர்ந்து பேசியவர், இப்படத்தில் நடித்த பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இப்படம் மொத்த இந்தியாவிற்கானது. அனைவருக்கும் பிடிக்கும். தமிழில் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன், என்று கூறினார்.

 

நடிகர் அரவிந்த்சாமி பேசுகையில், “ஒன்றறை வருட பயணம் இது. இம்மாதிரியான படத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து எனக்கும் வாய்ப்பு தந்தற்கு, தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இப்படத்தில் வரும் அனவைருமே, வரலாற்று நாயகர்கள். இப்படிபட்ட படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. இப்படத்தில் மிகப்பெரும் ஆளுமைகள் ஒன்றிணைந்து பணியாற்றீயுள்ளார்கள். அவர்களால் தான் இப்படம் சாத்தியமாகியுள்ளது. கங்கனா அற்புதமாக நடித்துள்ளார். சமுத்திரகனி, தம்பி ரமையா, நாசருடன் பணிபுரிந்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரும் இப்படத்தில் நடிக்க நான் கஷ்டப்பட்டு உழைத்ததாக கூறினார்கள். ஒரு கதாபாத்திரத்திற்கு என்ன வேண்டும் என்று நமக்கு முதலிலேயே தெரியும், அதை செய்ய வேண்டியது நம் கடமை. நான் இஷ்டப்பட்டு மகிழ்சியுடன் தான் இப்படத்தை செய்தேன் படம் நன்றாக வந்துள்ளது.” என்றார்.

 

Thalaivi Trailer Launch

 

இயக்குநர் விஜய் பேசுகையில், “இப்படத்திற்காக இரண்டு வருடங்கள் முன் தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது,  சிறு தயக்கம் இருந்தது. பின்னர் இப்படம் செய்ய வேண்டும் என ஒப்புகொண்டேன். எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் அவர்களுடன் வேலை செய்தது, மீண்டும் பள்ளி செல்வது போல், மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். அரவிந்த்சாமி அவர்கள் நடித்தது படத்திற்கு மிகப்பெரிய பலம், அவருடைய  உழைப்பின் மூலம் இந்த படத்தை மிகவும் சிறப்பாக ஆக்கியுள்ளார். ஜீவி எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போல, அவருடைய பங்கு இந்த படத்தில் மிகப்பெரியது, அவருடைய பாடல்கள் இந்த படத்தில் பெரிதாக பேசப்படும். மதன் கார்க்கி, அஜயன் பாலா இருவரும் இந்த படத்தில் பெரும் பங்கு வகுகித்துள்ளனர். பாக்கியஸ்ரீ, தம்பி ராமையா, மதுபாலா மூவரும் அவர்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். சமுத்திரகனி அவர்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றி. இணை தயாரிப்பாளர்கள் திருமல், ரித்தேஷ், சைலாஷ் அவர்களுக்கு நன்றி. நான்கு தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா அவர்களுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி, அவருடைய திறமை அளப்பறியது, கதையினை உணர்ந்து நடிப்பார். எடை கூடுதல், குறைப்பது என இப்படத்தில் அவரது பங்கு அதிகம். அரசியல் கதையாக பார்க்காமல், ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக வெற்றி பெற்ற, ஒரு பெரும் ஆளுமையை பற்றிய படமாக இது இருக்கும்.” என்றார்.

 

30 வருட கால ஜெயலலிதாவின் வாழ்வின் தடங்களை,ஒரு நடிகையாக, உயர்ந்த நட்சத்திரமாக, அவரின்   போராட்டத்தை, பெரும் சூழ்ச்சிகளை வென்று சாதனை படைத்திட்ட அரசியல் வாழ்வை, அதன் தாக்கம் குறையாமல்,  உணர்வுபூர்வமாக  வெள்ளித்திரையில் வெளிக்கொடுவரவுள்ளது "தலைவி"  திரைப்படம்

 

வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘தலைவி’ படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.