Jul 12, 2022 03:22 AM

'கட்டில்' திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

'கட்டில்' திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

நடிகர், இயக்குநர், கவிஞர் என்று பண்முகத்திறமை கொண்டவராக தமிழ் சினிமாவில் வலம் வரும் இ.வி.கணேஷ்பாபு தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கட்டில்’. இப்படத்தின் படணிகள் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயராக உள்ள நிலையில், விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அதை தொடர்ந்து திரையரங்குகளில் படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்ற ‘கட்டில்’ திரைப்படம் பாராட்டுக்களையும் பல விருதுகளையும் குவித்து வருவதோடு, இப்படத்தின் உருவாக்கத்தைப் பற்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்து பாராட்டு பெற்று வருகிறது.

 

ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தை புத்தகமாக வெளியிட்டது இந்திய சினிமாவிலேயே இது தான் முதல் முறை என்ற பெருமையை பெற்றிருப்பதோடு, புனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்த நூலை பார்த்த பிரபல திரைப்பட பேராசிரியர் சமர் நாட்டக்கே, மூலம் இந்த நூல் உலகின் பல்வேறு திரைப்பட கல்லூரிகளுக்கும் சென்று சேர்ந்துள்ளது.

 

இந்த நிலையில், வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ்ப் பலகலைக்கழகம் சிறந்த நூல்களுக்கான விருதை ‘கட்டில்’ திரைப்பட உருவாக்க நூலுக்கு வழங்கியுள்ளது. இதற்கான விழா சென்னையில் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்றது.

 

ரவி தமிழ்வாணன் , எஸ்.பி.பெருமாள்ஜி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ‘கட்டில்’ திரைபப்ட நாயகன், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இ.வி.கணேஷ்பாபுக்கு விருது வழங்கினார்.