”சோழ தேசத்து பட்டத்து அரசனே...!” - நடிகர் பப்ளிக் ஸ்டாரை கொண்டாடும் தஞ்சை மக்கள்
தஞ்சையை சேர்ந்த தொழிலதிபரும், சமூக சேவகருமான துரை சுதாகர், மக்களால் பப்ளிக் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர். மக்கள் அவருக்கு வழங்கிய பட்டம் போலவே ’தப்பாட்டம்’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகனாக அறிமுகமானவர் ‘களவாணி 2’ படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து, ‘கப ரணசிங்கம்’, ‘டேனி’ உள்ளிட்ட பல படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராக பாராட்டு பெற்றார்.
இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் வெளியான ‘பட்டத்து அரசன்’ படத்தில் முக்கியமான வேடத்தில், நடிகர் ராஜ்கிரணின் மகன்களில் ஒருவராக நடித்தவர், தற்போது தொடர்ந்து பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். குறிபாக இரா.சரவணன் இயக்கத்தில், சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோரது நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘நந்தன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற நந்தன் பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர் துரை சுதாகரின் நடிப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெகுவாக பாராட்டினார்.
நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் துரை சுதாகர், தற்போது சின்னத்திரையிலும் அசத்தி வருகிறார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும், சமூக பணிகளிலும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர், பொதுமக்களுக்கு மட்டும் இன்றி திரைத்துறையிலும் பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில், துரை சுதாகர் அவர்களின் பிறந்தநாளான இன்று (செப்.15) அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தஞ்சை மக்கள் ”சோழ தேசத்து பட்டத்து அரசனே...!” என்று குறிப்பிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்கள் மற்றும் இணையதலங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, உலக முதல் பணக்காரராக திகழும் டெஸ்ட்லா மற்றும் ஸ்பேஷ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், ஆப்பில் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கிண்டல் செய்யும் விதமாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நாயகனாக நடித்த ‘தப்பாட்டம்’ படத்தின் போஸ்டரை எடுத்துக்காட்டாக வெளியிட்டிருந்தார். இதன் மூலம் உலகம் முழுவதும் துரை சுதாகர் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.