தீபா கையில் கத்தி, அப்பு குட்டி முகத்தில் இரத்தம்! - கவனம் ஈர்க்கும் ‘கலன்’

ராமலட்சுமி புரொடக்ஷன் மற்றும அனுசுயா பிலிம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘கலன்’. ‘கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் இயக்கும் இப்படத்தில் தீபா, அப்பு குட்டி முதனமை வேடத்தில் நடிக்க, சம்பத் ராம், சேரன் ராஜ், குருமூர்த்தி, மணிமாறன், ராஜேஷ், யாசர், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் நடக்கும் கொடூர கொலைகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அப்பு குட்டி, கடும்கோபம் கொண்டவராகவும், நடிகை தீபா கத்தியுடன் இருப்பது போல வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
ஜெர்சன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜெயக்குமார் மற்றும் ஜேகே ஒளிப்பதிவு செய்துள்ளனர். விக்னேஷ் வர்ணம், விநாயகம் படத்தொகுப்பு செய்ய, குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன் பாடல்கள் எழுதியுள்ளனர். திலராஜன் மற்றும் அம்பேத் கலை இயக்குநர்களாக பணியாற்ற, வெரைட்டி பாலா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.