இணையத்தில் வைரலாகும் லக்ஷ்மி மஞ்சுவின் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் பாடல்!
நடிகை, தாரிப்பாளர், சமூக சேவகர், கொடையாளி என பன்முகத்திறன் கொண்ட லக்ஷ்மி மஞ்சு, தனது புதிய படமான ' அக்னி நட்சத்திரம்' படத்தில் பிசியாக இருக்கிறார். அப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்புகளும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏர்படுத்திய நிலையில், சமீபத்தில் வெளியான அப்படத்தின் முதல் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அச்சு ராஜாமணியின் இசையில், விவேகாவின் வரிகளில், சுனிதா குரலில் வெளியாகியுள்ள ”வானம் தூரம் இல்லையே...” என்ற அந்த பாடல், பெண்கள் தைரியமாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவது குறித்த வார்த்தைகளை கொண்ட பாடலாக அமைந்திருக்கிறது.
வலிமையான வரிகளோடு உருவாகியுள்ள இந்த பாடல் மிக பிரமண்டமன முறையில் படமாக்கப்பட்டிருப்பதோடு, லக்ஷ்மி மஞ்சுவின் ஸ்டைலிஷான நடனத்தாலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
பாடல் குறித்து கூறிய நடிகை லக்ஷ்மி மஞ்சு, “’அக்னி நட்சத்திரம்’ படத்தில் இடம் பெற்றுள்ள “வானம் தூரம் இல்லையே” பாடல் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதற்கு பாடலின் வரிகளும், அதை படமாக்கிய விதமும் தான் காரணம். இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடியவர் என அனைவரது உழைப்பும் இந்த வெற்றிக்கு கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
அதிரடியான போலீஸ் வேடத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். போலீஸ் வேடங்களில் நடிப்பதை பெருமையாக மட்டும் இன்றி கடமையாகவும் நினைக்கிறேன். நமக்காக இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளை கெளரவிக்கும் விதமாகவே நான் போலீஸ் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறேன்.
பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் போலீஸ் திரைப்படங்களுக்கு நான் தீவிர ரசிகை. அவருடைய அதிரடியான போலீஸ் பட காட்சிகளால் ஈர்க்கப்பட்ட நான் என் படத்திலும் அவருடைய பாணியிலான காட்சிகள் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதெ சமயம், என்னுடைய சிந்தனைக்கு ஏற்ப அந்த காட்சிகளை பிரமாண்டமான முறையில் படாக்கியிருக்கிறோம். இது ரசிகர்களை வெகுவாக கவரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.
மஞ்சு லக்ஷ்மியுடன், அவருடைய தந்தையும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான டாக்டர்.மஞ்சு மோகன் பாபு, சமுத்திரக்கனி, விஸ்வந்த், சித்ரா சுலேகா, சித்திக் உள்ளிட்ட பலர முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி பிரசன்னா பிக்சர்ஸ் மற்றும் மஞ்சு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் டாக்டர்.மஞ்சு மோகன் பாபு மற்றும் மஞ்சு லக்ஷ்மி பிரசன்னா தயாரிக்கிறார்கள். வம்சி கிருஷ்ணா மல்லா திரைக்கதை எழுதி இயக்குகிறார்.