Oct 10, 2023 07:00 PM
‘லியோ’ படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகிறது!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வரும் அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையே, படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிக்கப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது பாடலின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ”அன்பெனும்..” என்ற அந்த பாடல் நாளை (அக்.11) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.