Mar 14, 2022 05:00 PM

முழுக்க முழுக்க காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் ‘கடல போட ஒரு பொண்ணு வேணும்’

முழுக்க முழுக்க காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் ‘கடல போட ஒரு பொண்ணு வேணும்’

வித்தியாசமான தலைப்புகள் மூலம் பல படங்கள் மக்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தலைப்பு மூலமாகவே ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘கடல போட ஒரு பொண்ணு வேணும்’. 

 

ஆர்.ஜி.மீடியா நிறுவனம் சார்பி. டி.ராபின்சன் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி ஆனந்தராஜன் இயக்குகிறார். விஜய் டிவி அசார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், நாயகியாக மனிஷா ஜித் நடித்திருக்கிறார். இவர்களுடன் செந்தில், மன்சூரலிகான், பிக்பாஸ் காஜல், லொள்ளுசபா மனோகர், சுவாமிநாதன், சாய் தீனா, ஜார்ஜ்,தெனாலி, சிவசங்கர் மாஸ்டர், பவுன் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

இனியன்.ஜே ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜூபின் இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுத, வசீகரன் வசனம் எழுதியுள்ளார். தீனா மற்றும் ராதிகா நடனம் அமைக்க, மணவை புவன் மக்கள் தொடர்பாளர் பணியை கவனிக்கிறார்.

 

படம் குறித்து இயக்குநர் ஆனந்தராஜ் கூறுகையில், “காதல் காமெடி திரைப்படம் ’கடல போட பொண்ணு வேணும்’. ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில்,  காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது.

 

வளர்ந்து வரும் இன்றய சூழலில் எல்லோரிடமும் செல் போன் உள்ளது. இது சில நேரங்களில் சிலருடைய வாழ்க்கைக்கு உந்துதலாக அமைகிறது. சிலருடைய வாழ்க்கைக்கு சிக்கலாகவும் அமைகிறது.  

தன்னுடைய பரம்பரை சாபத்தை நீக்க போராடும் ஹீரோ அசார். தான் காதலிச்சிதான் கல்யாணம் பண்ணனும் என்கிற  எண்ணத்தோடு பல பெண்களிடம் காதலை சொல்லியும் தோல்வியே அடைகிறார். இவர் கடைசியாக ஒரு பெண்ணை பாலோ செய்து தன்னுடைய காதலை தெரிவிக்கின்றார். அவர் பதிலை  செல்போனில் தெரிவிப்பதாக கூற. சில மணி நேரத்திற்கு பின் தன் வாழ்நாளில் மறக்க முடியாத சிக்கல்களை அந்த செல்போன் மூலம் சந்திக்கிறார். இதிலிருந்து அவர்  மீண்டார் காதலி பதில்  என்ன ஆனது, இறுதியில்  தனது குடுபத்தின் சாபத்தை நீக்கினாரா? என்பதை டைம் லேப்ஸ் முறையில் காதல், காமெடி, சுவாரஸ்யம் என வித்யாசமான கோணங்களில் அனுகியுள்ளோம்.” என்றார்.