Jun 18, 2022 08:13 AM

’மாமனிதன்’ படம் பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக இருக்கும் - நடிகர் விஜய் சேதுபதி

’மாமனிதன்’ படம் பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக இருக்கும் - நடிகர் விஜய் சேதுபதி

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘மாமனிதன்’ திரைப்படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் முதல் முறையாக இணைந்து இசையமைத்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “நீங்க நடித்தால் நானும் - அப்பாவும் ம்யூசிக் பண்றோம் என யுவன் ஒரு நாள் சொன்னார். அப்படி துவங்கிய படம்தான் மாமனிதன். மிகப்பெரிய விஷயத்தை எளிமையா சொல்லக் கூடிய இயக்குநர் சீனு ராமசாமி. அப்படிதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். நான் நடிகனாக ஆசைப்பட்ட காலத்தில் குருசோமசுந்தரம் போல் நடிக்க வேண்டும் என ஏக்கம் இருக்கும். அப்படிபட்ட நடிகர் குரு சோமசுந்தரம்.  அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இந்த படத்தை குறுகிய காலத்த்தில் எடுத்து முடிக்க இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் தான் காரணம். மூன்று இடங்களில் நடக்க கூடிய  கதையை இவ்வளவு சீக்கிரம் எடுத்து முடிக்க  இருவர்களுடைய  அர்பணிப்பு தான் காரணம். பலர் நடிக்க ஒத்துகொள்ளாத கதாபாத்திரத்தை காயத்ரி ஏற்றுகொண்டு நடித்துள்ளார். அவருடைய திறமைகள் இன்னும் வெளிகொண்டு வரப்படவில்லை. இந்த படம் நம்முடைய கதையை கூறுவது போல் இருக்கும். யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து என் படத்திற்கு இசையமைக்க போகிறார்கள் என்ற வாய்ப்பு எனக்கு வந்தபோது, சீனுராமசாமி தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்த படம் ஒரு பெரிய அனுபவமாக பார்ப்பவர்க்கு இருக்கும். ” என்றார்.

 

இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “இந்த திரைப்படம் மூலமாக உலகமே விஜய் சேதுபதியை திரும்பிபார்க்க வேண்டும் என்று நான் விருப்பபடுகிறேன். முதலில் இந்த படத்தில் கார்த்திக் ராஜா- யுவன் சங்கர் ராஜா - இளையராஜா இசையமைப்பதாக இருந்தது. பின்னர் கார்த்திக் ராஜா ஒரு சில காரணத்தால் விலகிவிட்டார். இந்த கதை பலரால் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் விஜய் சேதுபதி என்னை அழைத்தார். பின்னர் இந்த படம் ஆரம்பமானது இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்க முடிவெடுத்த போது, நான் அவர்களுக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம் இளையராஜா அவர்கள் வாழ்ந்த இடத்தில் படமாக்க விரும்பினேன். அவர் வாழ்ந்த தேனி பண்ணைபுரத்தில் இந்த படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டது. நடிகர்களுக்குள் இருக்கும் இயல்புணர்ச்சியை வெளிகொண்டுவருவதே என்னுடைய பணியாக இருந்தது. நான் பல நடிகைகளுக்கு கதை சொன்னேன். பலருக்கு இரண்டாம் பாதியில் விருப்பம் இல்லை. அப்போது காயத்ரி இந்த திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி நடித்துகொடுத்தார். இந்த படத்திற்கு கண்டிப்பாக காயத்ரிக்கு தேசியவிருது கிடைக்கும்.  இந்த படத்தை ஜீவா மற்றும் இளையராஜாவிற்கு அர்பணித்து இருக்கிறேன். நம்மை சுற்றியுள்ள மாமனிதர்களை அடையாளப்படுத்தும் படம் தான் இது. இந்த படத்தை நீங்கள் அனைவரும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த படத்தை பார்க்கும் மக்கள் உங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும். நன்றி.” என்றார்.

 

Maamanithan

 

நடிகை காயத்ரி பேசுகையில், “கிராமம் என்று நமக்குள் இருக்கும் பார்வையை, வேறு கோணத்தில் காட்டுபவர் சீனுராமசாமி சார். இந்த படம் ஒரு காதல் கதை. இந்த படத்தில் 40 வருட வாழ்க்கை கதை இருக்கிறது. அதற்கான உழைப்பை கொடுத்துள்ளோம். இந்த படம் நிஜ வாழ்கையை பிரதிபலிக்கும் விதமாக வந்துள்ளது. அதற்கு காரணம் இயக்குனர் சீனுராமசாமி. இந்த படத்தில் யுவன் சார், இளையராஜா சார் இணைந்து இசையமைப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தின் பணியாற்றியது என் பாக்கியம்.” என்றார்.

 

’மாமனிதன்’ படத்தை தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் வெளியிடும் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “வாழ்வியலை பற்றி படமாக எடுக்கும் இயக்குனர்கள் குறைவாக உள்ளனர். அவர்களில் ஒருவர் சீனுராமசாமி. தர்மதுரையின் சாயலில் இல்லாமல் ஒரு புது அனுபவமாக இந்த படம் இருக்கும். இது எல்லோருடைய வாழ்கையிலும் அவர்கள் ரிலேட் செய்துகொள்ளும் படமாக இருக்கும். இந்த படத்தை தயாரித்ததற்கு யுவன் சாருக்கு நன்றி கூறிகொள்கிறேன். இந்த கதை மூன்று இடங்களில் நடக்கும், தேனியில் ஆரம்பித்து, கேரளா சென்று, காசியில் முடிவடைவது போல் கதையமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் எனக்கு ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி இந்த படத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும். காயத்ரிக்கு இந்த படம் முக்கியமானதாக இருக்கும். அவர் மூன்று வெவ்வேறு வகையான சூழ்நிலையில் தன் நடிப்பை வெளிப்படுத்த வேண்டியது போல கதையமைப்பு இருக்கும். அதை அவர் சிறப்பாக செய்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என நான் உறுதியாய் நம்புகிறேன்.” என்றார்.