Apr 01, 2025 06:16 AM

பஹத் பாசில் - வடிவேலு இணைந்து நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை மாதம் வெளியாகிறது!

பஹத் பாசில் - வடிவேலு இணைந்து நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை மாதம் வெளியாகிறது!

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாரீசன்' எனும் திரைப்படத்தில் பகத் பாசில், வடிவேலு, விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். டிராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தயாரித்திருக்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

 

இதனிடையே சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98 ஆவது திரைப்படம் இது என்பதும், 'மாமன்னன்' படத்திற்குப் பிறகு வடிவேலு - பகத் பாசில் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் இது என்பதும் , இதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.