Mar 09, 2018 05:30 AM

’நாடோடிகள் 2’ பட பாடல் காட்சிக்காக பல லட்சங்கள் செலவு!

’நாடோடிகள் 2’ பட பாடல் காட்சிக்காக பல லட்சங்கள் செலவு!

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘நாடோடிகள் 2’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘நாடோடிகள் 2’ என்ற தலைப்பில் சமுத்திரக்கனி இயக்கி வருகிறார். 

 

சசிகுமார், அஞ்சலி முதல் முறையாக ஜோடி சேரும் இப்படத்தில் பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்பராயண், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

 

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இப்படம் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. சசிகுமார் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருட்ச்செலவில் தயாராகி வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று மதுரையில் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைய உள்ளது.

 

இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று பிரம்மாண்டமான முறையில் படமாக்க இயக்குநர் சமுத்திரக்கனி  திட்டமிட்டுள்ளார். பல லட்சங்கள் செலவில் படமாக்கப்பட இருக்கும் அப்பாடல் காட்சியின் படப்பிடிப்பு வரும் 11 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் படத்தில் நடிக்கும் அனைத்து நட்சத்திரங்களும் இடம்பெறுவதோடு, ஏராளமான துணை நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.