Oct 25, 2017 03:33 PM

‘மெர்சல்’ சர்ச்சை - ஜோசப் விஜயாக அறிக்கை விட்ட விஜய்!

‘மெர்சல்’ சர்ச்சை - ஜோசப் விஜயாக அறிக்கை விட்ட விஜய்!

தீபாவளி பண்டிகையன்று வெளியான ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற சில வசனங்களுக்கு தமிழக பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்ததோடு, மிரட்டலும் விடுத்தது. ஆனால், ஒட்டு மொத்த திரையுலகேமே விஜய்க்கு ஆதரவாக நின்றதாலும், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் பலர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்ததாலும், பா.ஜ.க காணாமல் போய்விட்டது.

 

மேலும், பா.ஜ.க-வின் எதிர்ப்பும், மற்றவர்களிடன் ஆதரவாலும் தேசிய அளவில் பிரபலமான ‘மெர்சல்’, ரூ.200 கோடி வசூலை எட்ட இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தயாரிப்பு தரப்பு பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்களாம்.

 

இந்த நிலையில், ‘மெர்சல்’ சர்ச்சை குறித்து மவுனமாக இருந்த நடிகர் விஜய் முதல் முறையாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலும், ஜோசப் விஜய் என்ற லெட்டர் பேடில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

 

அந்த அறிக்கையில் விஜய் கூறியிருப்பதாவது:

 

மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுக்களுடன், நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாபெரும் வெற்றியடைந்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச் சார்ந்த நண்பர்களான, நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையை சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பா, நண்பிகள் பொது மக்கள் அனைவரும் எனக்கும், மெர்சல் படக்குழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள்.

 

மேலும், மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும், ஆதரவு கொடுத்ததற்கும், அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.