’மெர்சல்’ தடை நீங்கியது - விஜய் ரசிகர்கள் உற்சாகம்!
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ ரிலிசாவதற்கு முன்பாக பல சாதனைகளை செய்து வரும் நிலையில், அப்படத்தின் தலைப்புக்கு எதிராக தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
தான், ‘மெர்சலாயிட்டேன்’ என்ற படத்தை தயாரித்து வரும் நிலையில் விஜய் படத்திற்கு ‘மெர்சல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தலைப்புக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வர்த்தக குறியீடு (டிரெட் மார்க்) பெற்றுள்ளது. இதனால், மெர்சலாயிட்டேன் படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 6ம் தேதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. தற்போது ‘மெர்சல்’ படத்தின் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். மேலும் ‘மெர்சல்’ தலைப்பை பயன்படுத்தவும், விளம்பரப்படுத்தவும் தடை இல்லை என்றும் கூறியுள்ளார். உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.