டிஜிட்டல் உலகில் பெரும் புரட்சி செய்து வரும் மூவி வோல்ட் மீடியா!
உள்ளங்கையில் உலகை கொண்டு வந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் தற்போது மீடியாத்துறையில் பல்வேறு புரட்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், டிஜிட்டல் உலகில் பெரும் புரட்சியை செய்து வருகிறது மூவி வோல்ட் மீடியா. கொச்சியை தலைமையிடமாக கொண்டு மியூசிக் ஷேக் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது டெல்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இன்சத் அவரது மனைவி உமையா இன்சத், மகள் பாத்திமா இன்சத் என குடும்பமே டிஜிட்டல் உலகில் பெரும் புரட்ச்சியை செய்து வருகிறார்கள். பாத்திமா இன்சத் அனிமேஷன் துறையில் சிறந்த வல்லுநராக விளங்குகிறார்.
ஆடியோ சிடி வாங்கி வெளியிட்டு வந்த இந்த நிறுவனம் பிறகு காப்பிரைட் வாங்குவது என்று படிப்படியாக உயர்ந்து தற்போது இந்தியாவின் மிக முக்கியமான டிஜிட்டல் பொழுதுபோக்கு நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது.
தற்போது இந்த நிறுவனத்திடம் 256 யூடியூப் சேனல்கள் உள்ளது. அதில் ஒன்று தான் ‘மூவி வோல்ட் விஷன் மீடியா’ இதில் மில்லியன் சப்கிரைபர்கள் உள்ளனர். மேலும், 56 பேஷ்புக் பக்கங்களும் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி இந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் உரிமையாளர் இன்சத் டிஜிட்டல் துறை குறித்து கூறுகையில், “டிஜிட்டல் உலகில் வெற்றி பெற பொறுமை அவசியம். உடனே வெற்றி கிடைக்காது முயற்சி முக்கியமான ஒன்று. ஒரு ஓட்டப்பந்தய வீரனை போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். இன்றைய உலகில் மக்கள் மிகவும் மன அழுத்தத்தை வைத்து கொண்டு ஓடி கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு ரிலாக்ஸாக இருப்பது டிஜிட்டல் மீடியா தான்.” என்றார்.
மூவி வோல்ட் மீடியா நிறுவனத்தின் சென்னை அலுவலகம் திறப்பு விழா பூஜையுடன் நடைபெற்றது. இதில் பிரபல நடிகை ஷீலா ராஜ்குமார், நடிகர்கள் காதல் சுகுமார், ஜீவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.