Sep 11, 2018 08:54 AM

சம்பளத்தை உயர்த்திய நயந்தாரா? - எவ்வளவு தெரியுமா?

சம்பளத்தை உயர்த்திய நயந்தாரா? - எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள நயந்தாரா, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தோடு முன்னணி ஹீரோக்கள் சிலரை ஓவர் டேக் செய்து வருகிறார். அஜித், கமல், சிரஞ்சீவி என்று ஒரே நேரத்தில் மூன்று உச்ச நடிகர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.

 

நயந்தாராவின் நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ என இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படங்கள் ஓடியதற்கு நயந்தாரா தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக ஹீரோயின்கள் கவர்ச்சியாக நடித்தால் தான், ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆனால், நயந்தாரா அப்படி ஏதும் செய்யாமலே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்திருப்பதோடு, அவரது படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

 

இப்படி படத்திற்கு படம் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்து வரும் நயந்தாரா, தற்போது தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக இருந்தால், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் முதல் தேர்வு நயந்தாராவாக இருப்பதால், அவரது வாசலில் ஏகப்பட்ட பேர் காத்திருக்கிறார்களாம். அப்படி நயந்தாராவை கதையுடன் அனுகும் தயாரிப்பாளர்களிடம் அவர் ரூ.5 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. அவர் கேட்கும் இந்த தொகையால் தயாரிப்பாளர்கள் சற்று அதிர்ச்சியானாலும், அவர் மீது நம்பிக்கை வைத்து அந்த தொகையை கொடுக்கவும் முன்வருகிறார்களாம்.

 

இதற்கிடையில், தனது காதலரை எப்போது நயந்தாரா மணக்கப் போகிறார், என்பதில் அவரது ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருந்தாலும், திருமணம் பற்றி தற்போது நயந்தாரா யோசிப்பதாக இல்லை, என்றும் கூறப்படுகிறது.