Apr 06, 2018 05:36 AM

அஜித்துக்காக காதல் விவகாரத்தை கைவிடும் நயந்தாரா!

அஜித்துக்காக காதல் விவகாரத்தை கைவிடும் நயந்தாரா!

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயந்தாரா, கமல், அஜித், சிரஞ்சீவி என்று மூன்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருவதோடு, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் பல பட வாய்ப்புகள் அவரை நோக்கி சென்றுக் கொண்டிருக்க ஒட்டு மொத்த தமிழ் கதாநாயகிகளும் நயனை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு அவர் மேலே...மேலே...என்று போய்க்கொண்டே இருக்கிறார்.

 

’விஸ்வாசம்’ படத்திற்குப் பிறகு அஜித் படத்தை யார் இயக்கப் போவது? என்பது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய வினோத், அஜித் படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், அஜித்தை சந்தித்து பிரபு தேவா கதை சொல்லியிருப்பதாகவும், அந்த கதை அஜித்துக்கு ரொம்ப பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், பிரபு தேவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நயந்தாராவையே அஜித்தின் அடுத்தப்படதிலும் ஹீரோயினாக்க அஜித் தரப்பு முடிவு செய்துள்ளதாம். ஆனால், ஏற்கனவே பிரபு தேவாவை காதலித்து பிரிந்த நயந்தாரா, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இந்த சமயத்தில் அவர் பிரபு தேவா இயக்கத்தில் நடிப்பாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

 

ஆனால், வாழ்க்கை வேறு, வேலை வேறு, என்று கூறிய நயந்தாரா, பிரபு தேவாவின் காதல் விவகாரத்தை கைவிட்டுவிட்டு, அவரது இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.