அப்செட்டில் இருக்கும் நயந்தாராவின் காதலர்!
அமெரிக்கா சுற்றுலா, காதல் பரிசு என்று கடந்த ஆண்டு ரொம்பவே சந்தோஷத்தில் இருந்த நயந்தாராவின் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவன், இந்த ஆண்டு ரொம்பவே அப்செட்டில் இருக்கிறார்.
சூர்யாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தால் அதை வெளியிட்ட விநியோகஸ்தருக்கு சுமார் ரூ.13 கோடி நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், படத்தை வெளியிடும்போதே, நஷ்ட்டம் ஏற்பட்டால் அதை ஈடுக்கட்டிவிடுவதாக தயாரிப்பாளர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால், செய்தி அதுவல்ல, டிவிட்டரில் விமர்சனம் செய்பவர்களில் ஒருவர், ”ஜனவரி மாதம் வெளியான எந்த படமும் ஓடவில்லை, பிப்ரவரியில் வெளியாகும் படங்களாவது ஓடுகிறதா என்று பார்ப்போம்” என்று டிவீட் செய்துள்ளார். இதைப் பார்த்த விக்னேஷ் சிவன், சட்டென்று கோபப்பட்டு, “இதுபோன்றவர்களால் தான் சினிமா அழிந்து வருகிறது. நாங்கள் கஷ்ட்டப்பட்டு படம் எடுத்தால், இரண்டு வரிகளில் இப்படி எங்களை நோகடித்து விடுகிறார்கள். பணத்திற்காக எங்களிடம் வருபவர்கள், பிறகு எங்கள் படத்தையே குறை சொல்கிறார்கள்” என்று அந்த நபரை திட்டி தீர்த்துவிட்டார்.
விக்னேஷ் சிவனின் இந்த கோபத்திற்கு காரணம், அவரது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படமும் ஜனவரி மாதம் தான் வெளியானது என்பது தான்.