ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ’ஜெய் ஹனுமான்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் பிரசாந்த் வர்மா, தனது சினிமாடிக் யுவர்ஸின் மற்றொரு சாகச காவியத்திரைப்படமாக உருவாக்கி வரும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தின் திரைக்கதை ஏற்கனவே முழுமையாக தயாராகிவிட்ட நிலையில், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்பில் மிக பிரமாண்டமான திரைப்படமாக தயாராக உள்ளது.
இந்த நிலையில், ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது. போஸ்டரில் ஹனுமான் ஒரு குன்றின் மீது கையில் சூலாயுதத்துடன் நிற்க, நெருப்பை கக்கும் டிராகன் பின்னணியில் இருக்கிறது. இதன் மூலம் பிரசாந்த் வர்மா முதல் முறையாக டிராகன்களை இந்திய திரைக்கு கொண்டு வருகிறார். உலகத்தரத்திலான VFX மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப தரத்துடன், ரசிகர்களுக்கு இதுவரை இந்திய திரையுலகம் கண்டிராத அனுபவத்தை இப்படம் வழங்கும்.
ஜெய் ஹனுமான் திரைப்படத்தை ஐமேக்ஸ் 3டியில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு, இப்படம் பற்றிய மற்ற விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளது.
மேலும், ’ஹனுமான்’ படத்தின் 100 நாட்கள் நிறைவு விழாவினை நேற்று படக்குழுவினர் கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.