Jun 28, 2024 06:02 AM

புதுமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘ஆர் கே வெள்ளிமேகம்’! - ஜூலை 12 ஆம் தேதி வெளியாகிறது

புதுமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘ஆர் கே வெள்ளிமேகம்’! - ஜூலை 12 ஆம் தேதி வெளியாகிறது

சந்திரசுதா ஃபிலிம்ஸ் சார்பில் பி.ஜி.சாமச்சந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘ஆர் கே வெள்ளிமேகம்’. மலையாளத்தில் ஐந்து படங்கள் இயக்கியிருக்கும் சைனு சவக்கடன் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

 

ஆதேஷ் பாலா, சின்ராசு, கொட்டாச்சி, ‘சிறுத்தை’ விசித்திரன், விஜய் கெளரிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

 

புதுமையான கதைக்களத்தில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படமான ‘ஆர் கே வெள்ளிமேகம்’ வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.