Sep 11, 2017 08:26 AM

இயக்குநரால் நடிகை நிக்கி கல்ராணிக்கு வந்த வயிறு வலி!

இயக்குநரால் நடிகை நிக்கி கல்ராணிக்கு வந்த வயிறு வலி!

கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹர ஹர மகாதேவகி’ படத்தை புளூ கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ், தங்கம் சினிமாஸ் தங்கராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு பாலமுரலி பாலு இசையமைக்க, செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, தயாரிப்பாளர் சங்க கௌரவ செயலாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் சங்க கௌரவ செயலாளர் கதிரேசன் , 2டி எண்டர்டெயின்மெண்ட் ராஜசேகர் பாண்டியன் , தயாரிப்பாளர் தங்கராஜ் , இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார், ஒளிப்பதிவாளர் செல்வகுமார், இசையமைப்பாளர் பால முரளி பாலு, நடிகர்கள் ரவிமரியா, சதீஷ், மயில்சாமி, ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர்கள் கே.ஆர், அருள்பதி , ஆரா சினிமாஸ் மகேஷ், இயக்குநர் ஆர்.கண்ணன், கௌரவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

விழாவில் கௌதம் கார்த்திக் பேசுகையில், “எல்லோரும் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை பார்த்து ரசித்திருப்பீர்கள். இந்த கதை பலருக்கு சென்று மீண்டும் என்னை தேடி வந்துள்ளது. இயக்குநர் சந்தோஷ் என்னிடம் கதை சொல்ல வந்தபோது முதலில் எனக்கு இப்படத்தின் பாடல்களை தான் போட்டு காண்பித்தார். பாடல்களை நான் மிகவும் ரசித்து, சிரித்து கேட்டேன். பாடல்களை கேட்டதும் இந்த கதையில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதன் பிறகு இயக்குநர் என்னிடம் ஹரஹர மகாதேவகியின் கதையை கூறினார். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் ஒவ்வொரு நாளும் நான் சந்தோஷமாக என்ஜாய் செய்து நடித்தேன். அனைவரும் கடினமாக உழைத்தோம். ஆனால் செட்டில் எல்லோரும் சிரித்துக்கொண்டே வேலை செய்தது அருமையாக இருந்தது. 

 

என்னுடைய கடினமான காலகட்டத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் என்னை அழைத்து இந்த படத்தை கொடுத்து உற்சாகத்தையும், நம்பிக்கையும் தந்தார். இப்படம் தமிழ் சினிமாவுக்கு புதுமையான படமாக இருக்கும். நான் ஹரஹர மகாதேவகி டீமோடு மீண்டும் ஒரு படத்துக்காக இணைகிறேன். படத்தின் டைட்டிலை இயக்குநரே அறிவிப்பார். நான் இன்று காலை என்னுடைய ரசிகர்களை சந்தித்தேன் என்னை மகிழ்விக்கும் வகையில் 25 கிலோ கேக்கோடு வந்து என்னுடைய பிறந்த நாளை இரண்டு நாட்களுக்கு முன்பாக இன்றே கொண்டாடினார்கள். என்னுடைய ரசிகர்கள் எல்லோரும் தான் என் குடும்பம்.” என்றார். 

 

நிக்கிகல்ராணி பேசும் போது, “டார்லிங் படத்தின் மூலம் என்னை  அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்கள் இந்த படத்தின் கதையை கேட்கும்படி கூறினார். இயக்குநர் சந்தோஷ் என்னுடைய வீட்டுக்கு வந்து கதை சொன்னார். கதையை கேட்டு சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது. 

 

சந்தோஷ் என்னிடம் கதை சொன்ன போது என்னுடைய போர்ஷனில் வரும் விஷயங்களை மட்டும் தான் கூறினார். இப்போது இங்கே வந்த பிறகு தான் கதை, திரைக்கதை, வசனம் என்று அனைத்தும் எனக்கு கொஞ்ச கொஞ்சமாக தெரிகிறது. அனைத்து நன்றாக உள்ளது. கௌதம் கார்த்திக் எனக்கு நல்ல நண்பன். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு தமிழ் சரியாக தெரியாததால், தமிழ் கற்று கொடுத்தார். இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் பாடல்கள் அனைத்தும் கேட்க அருமையாக உள்ளது,” என்றார்.

 

 

ஞானவேல் ராஜா பேசுகையில், “கௌதம் கார்த்திக்கை வைத்து எங்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது. அந்த படத்தை ‘ஹரஹர மகாதேவகி’ இயக்குநர் சந்தோஷ் தான் இயக்குகிறார். என்றார்.

 

இதை தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கவுள்ள அப்படத்தின் டைட்டில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என அறிவித்தார் இயக்குநர் சந்தோஷ்.