Aug 16, 2022 08:00 PM

ஒரே மேடையில் மூன்று படங்களின் டிரெய்லர் வெளியீடு!

ஒரே மேடையில் மூன்று படங்களின் டிரெய்லர் வெளியீடு!

தமிழக அரசியலில் இன்றும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் பெயர் சசிகலா. அதே பெயர் தற்போது தமிழ் சினிமாவிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆம், சசிகலா புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மூன்று திரைப்படங்களின் டிரைலர் வெளியீட்டு விழாவை ஒரே மேடையில் நடத்தி கோடம்பாக்கத்தின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா  நடிப்பில் ‘கா’, கிஷோர் நடிப்பில் ‘ட்ராமா’ மற்றும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள ’லாகின்’ படங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இப்படைப்புகளின் டிரைலர் வெளியீட்டு விழாவும், சசிகலா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் அறிமுக விழாவும் சென்னை பிரசாத் லேபில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

 

இவ்விழாவினில் சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் சலீம் பேசுகையில், “இங்கு எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்நிறுவனத்தை புதிய நல்ல படைப்புகளை உருவாக்கும் எண்ணத்தில் உருவாக்கியுள்ளோம். படைப்புகளை பற்றி குழுவினர் கூறுவார்கள். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.  ” என்றார்.

 

’கா’ பட இயக்குநர் நாஞ்சில் பேசுகையில், “நான் கா படத்தின் இயக்குநர். இந்தப்படம் ஒரு ஹைபர்லிங் கதை. ஒரு காட்டில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் படம். இந்தப்படத்திற்கு நடிகர் சலீம் கௌஷல் மிகப்பெரும் உதவியாக இருந்தார். அவர் இப்போது இல்லாதது பெரிய வருத்தம். எனக்கு வாய்ப்பளித்த ஜான் மேக்ஸ் அவர்களுக்கும், படத்தை வெளியிடும் ஆண்டனி தாஸ் அவர்களுக்கும் நன்றி.” என்றார்.

 

ட்ராமா இயக்குநர் அர்ஜூன் திருமலா பேசுகையில்,  “தமிழில் இது எனது முதல் படம். இது சிங்கிள் ஷாட் படம். எல்லாப்படமும் எடுப்பது மிகவும் கஷ்டம் தான் ஆனால் இது சிங்கிள் ஷாட் என்பதால் இன்னும் கொஞ்சம் கஷ்டம் அதிகமாக இருந்தது. இது ஒரு கமர்ஷியல் படம். சிங்கிள் ஷாட்டில் மூன்று பாடல்கள், ஃபிளாஷ்பேக், என அனைத்து கமர்சியல் அம்சங்களும் உள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

ட்ராமா  பட நடிகை காவ்யா வெல்லு பேசுகையில், “இது எனது முதல் படம் இந்தப்படத்தின் மூலம் தமிழ் கற்றுக்கொண்டேன். இது ஒரு சிங்கிள் ஷாட் மூவி என்பதால் பிராம்ப்டிங் அஸிஸ்டெண்ட்  இருக்க மாட்டார்கள், ரீடேக் போக முடியாது. ஆனால் நிறைய கற்றுக்கொண்டேன். மதுரை பெண்ணாக நடித்திருக்கிறேன். உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.  படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஆண்டனி ராஜ் பேசுகையில், “சசிகலா புரடக்சன்ஸ் ஆண்டனி தாஸ் மற்றும் சலீம் அவர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும். உண்மையில் படம் ஆரம்பித்து 3 வருடங்களாக அநாதையாக இருந்தோம். எங்கள் படத்திற்கு உயிர் கொடுத்தார்கள் அவர்களுக்கு நன்றி.” என்றார்.

 

லாகின் திரைப்பட இயக்குநர் ராஜேஷ் வீரமணி   பேசுகையில், “எங்கள் தயாரிப்பாளர் ஜேகே மற்றும் சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. 2 மணி நேரம் உங்களை சுவாரஸ்யப்படுத்தும் ஒரு கதையை உண்மையாக அர்ப்பணிப்புடன் சொல்லியுள்ளோம்.” என்றார்.

 

நடிகர் வினோத் கிஷன் பேசுகையில், “லாகின் லாக்டவுன் முடிந்து ஷீட் போன படம், நாம் தெரியாமல் செய்யும் சின்ன தப்பு எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்குவது தான் இந்தப்படம் மிக சுவாரஸ்யமாக இருக்கும். இப்படத்தை  உருவாக்கிய தயாரிப்பாளர் ஜேகே மற்றும் வெளியிடும் சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கும். பெரிய  நன்றிகள்.” என்றார்.

 

இயக்குநர் தயாரிப்பாளர் திருமலை பேசுகையில், “சசிகலா புரடக்சன்ஸ் யார் என்பது தான் தமிழ் சினிமாவின் பரபரப்பு கேள்வியாக இருந்து கொண்டிருந்தது. வெளியாகுமா என்ற நிலையில் மூன்று சின்ன படங்களை வாங்கி அதன் வெளியீட்டை உறுதி செய்து வெற்றி கொடி நாட்டியிருக்கிறது சசிகலா புரடக்சன்ஸ். மூன்று படைப்புகளையும் தரமான படைப்புகளாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். நல்ல படைப்பாளிகள் இதன் மூலம் வெளிவருவார்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் பேசுகையில், “சினிமாவில் சின்னப்படம் பெரிய படம் என பிரிக்க தேவையில்லை. ரிலீஸுக்கு பின் தான் ஒரு படம் சின்னப்படமா பெரிய படமா என தெரியும். மைனா ரிலீஸான பிறகு தான் பெரிய படமாக மாறியது. எப்போதும் வெற்றிக்கு பிறகு தான் அதை முடிவு செய்ய வேண்டும். கா படம் மிக நன்றாக இருக்கிறது. ஆண்டனி தாஸ் இந்தப்படங்களை பார்த்து வாங்கியிருக்கிறார் அவருக்கு இந்தப்படங்கள் பெரிய லாபத்தை தரும் நன்றி.” என்றார்.

 

சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் ஆண்டனி தாஸ் பேசுகையில், “சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் பல தமிழ்ப்படங்களுக்கு நாங்கள் போஸ்ட் புரடக்சன்ஸ் செய்து வருகிறோம். நான் பல படங்களை பார்த்து வந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் பலர், நம் படத்தை வாங்குவார்களா?  நாம் ஜெயிப்போமா ?  என கனவுகளோடு இருக்கிறார்கள். சசிகலா புரடக்சன்ஸ்  அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். 2 மணி நேரம் ரசிகனை மகிழ்விக்கும் அனைத்து படமும் பெரிய படம் தான். எங்கள் நிறுவனம் மூலம் நல்ல படைப்புகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு அளிப்போம். இந்த மூன்று படங்களை எப்படி வெற்றி படமாக மாற்ற வேண்டும் என்ற ரகசியம் தெரியும் இந்தப்படங்கள் கண்டிப்பாக வெற்றியை பெறும். இப்படங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.