வைரமுத்து பாடல் வரிகளில் உருவாகியுள்ள ‘பனை’!

ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் ‘பனை’. தமிழ்நாட்டில் மீண்டும் பனைத் தொழில் வளர வேன்ப்டும், பனையால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக ஹரீஷ் பிரபாகரன் நடித்திருக்கிறார். நாயகியாக மேக்னா நடித்திருக்கிறார். இவர்களுடன் வடிவுக்கரசி, அனுபமா குமார், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, டி.எஸ்.ஆர், லாலா கடை புகழ் ரிஷா ஜேக்கப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
திரைக்கதை, வசனம் எழுதி ஆதி.பி.ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு மீராலால் இசையமைத்திருக்கிறார். படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். சிவக்குமார் ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தினா நடனக் காட்சிகளை வடிவத்திருக்கிறார். தயாரிப்பு நிர்வாகப் பணியை எம்.சிவகுமார் கவனிக்க, இணைத் தயாரிப்பு பணியை ஜெ.பிரபாகரன் கவனித்துள்ளார். மக்கள் தொடர்பாளராக வெங்கட் பணியாற்றுகிறார்.
இப்படத்தில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வைரமுத்து பாடல் வரிகளில் சிறப்பாக அமைந்துள்ளது
பனமரம் பனைமரம்
பணங்காய்க்கும் பனமரம்
பசிதீர்க்கும் மரமய்யா
பனமரம்
இது நம்ம பண்பாட்டில்
கலந்ததய்யா பனமரம்
நமக்காக நம்மோடு
வாழும்மய்யா பனமரம்
சேரன் ஆண்டகாலம் முதல்
செல்போன்கள் காலம் வரை...
என்று பனைமரத்தின் மகிமையை பற்றி எழுதியிருக்கிறார்
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.