நடிகர் பாண்டியராஜனுக்கு இன்று பிறந்தநாள் - திரையுலகினர் வாழ்த்து
இயக்குநரும் நடிகருமான ஆர்.பாண்டியராஜன் இன்று தனது பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
1985 ஆம் ஆண்டு பிரபு, ரேவதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘கண்ணிராசி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.பாண்டியராஜன், தனது 24 வயதில் படம் இயக்கியதால், மிக குறைந்த வயதில் திரைப்படம் இயக்கியவர் என்ற சாதனையை புரிந்தார். அதே ஆண்டில் தான் இயக்கிய தனது இரண்டாவது படமான ‘ஆண் பாவம்’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து தான் இயக்கிய படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்த பாண்டியராஜன், ‘டபுள்ஸ்’ படம் மூலம் பிரபுதேவாவை இயக்கியவர், மீண்டும் ‘கபடி கபடி’ படத்தை இயக்கி ஹீரோவாக நடித்தார். 2006 ஆம் ஆண்டில் வெளியான ‘கைவந்த கலை’ என்ற படத்தோடு இயக்குநர் பாண்டியராஜுக்கு ஓய்வு கொடுத்தவர் நடிகராக தொடர்ந்து பல படங்களில் கலக்கிக்கொண்டிருக்கிறார்.
திரைப்படங்கள் இயக்க வில்லை என்றாலும் டாக்குமெண்டரி படம் ஒன்றில் மூலம் சரவதேச திரைப்பட விழா விருது வென்றவர் விரைவில் திரைப்படம் இயக்கும் திட்டத்திலும் இருக்கிறார்.
இன்று (அக்.02) தனது 58 வது பிறந்தநாளை தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களோடு தனது இல்லத்தில் பாண்டியராஜன் சிறப்பாக கொண்டாடினார்.
அவருக்கு நடிகர்கள் விமல், ரோபோ சங்கர், சாந்தனு பாக்யராஜ், இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், இசயமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
தனது பிரந்தநாளையொட்டி மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு, பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.