’சங்குசக்கரம்’ படத்திற்கு ஊதப்பட்ட சங்கு!
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ’சங்குசக்கரம்’ படம் இம்மாதம் 29 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், அப்படத்திற்கு எதிராக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த செல்வகுமார் என்ற சமூக ஆர்வலர் ‘சங்குசக்கரம்’ திரைப்படத்தில் நடித்துள்ள சிறுவர், சிறுமியர் துண்புறுத்தப்பட்டிருப்பதாக கூறி போலீஷ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், “நான் ஒரு சமுக ஆர்வலர். சமீபத்தில் நடந்த ’சங்குசக்கரம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு வீடியோவை பார்த்தேன். அதில் பேசிய அப்படத்தில் நடித்த ஒரு குழந்தை நட்சத்திரம் தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், தனக்கு காண்டாக்ட் லென்ஸ் பொருத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேசும்போது, அந்த பேயாக நடித்த அந்த குழந்தை நட்சத்திரத்தை கயிற்றில் கட்டி தொங்க விட்டதாக தெரிவித்துள்ளார்.
படத்திலோ நடித்த குழந்தை நட்சத்திரமும், படத்தின் இயக்குனரும் சொல்வதை பார்த்தல் அதில் நடித்துள்ள குழந்தைகள் கண்டிப்பாக துன்பப்பட்டு இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லாமல் நிருபணமாகிறது.
எனவே இந்த படத்தில் அப்படி குழந்தைகள் உண்மையில் துன்புற்றப்பட்டிருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு படத்தினை வெளியிடாமல் தடை செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டால், விசாரணை, வழக்கு என்று இழுபறி ஏற்பட்டு அது படத்தின் ரிலிஸுக்கே சிக்கலாகிவிடும் என்று கூறப்படுகிறது.