Mar 14, 2022 04:59 PM

’பொன்னியின் செல்வன்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

’பொன்னியின் செல்வன்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கல்கியின் புகழ் பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் பல ஜாம்பவாங்கள் ஈடுபட்டு தோல்வியடைந்த நிலையில், இயக்குநர் மணிரத்னமும், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் அந்த சவாலில் வெற்றி பெற்றுள்ளது.

 

ஆம், மணிரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.

 

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று வந்த நிலையில், முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைடவடைந்ததாக படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. மேலும், கிராபிக்ஸ் பணிகள் தற்போது தொடங்கியிருப்பதால், இன்னும் சில மாதங்களில் முதல் பாகம் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது.

 

இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் வெளியீட்டு தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா குழுமத்தின் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (மார்ச் 02) ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் வெளியீட்டு தேதி மற்றும் கதாப்பாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

 

Ponniyin Selvan

 

அதன்படி, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

Ponniyin Selvan

 

மேலும், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா  ராய், திரிஷா ஆகியோரது கதாப்பாத்திர உருவம் கொண்ட புகைப்படங்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.