சிம்புவின் பிரச்சனையை தீர்த்து வைத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்!
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 6 ஆம் தேதி தொடங்கிது. ஆனால், சிம்புவால் தனக்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டது என்றும், அதற்கான தீர்வு கிடைக்கும் அரை அவருடைய புதிய படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்க கூடாது, என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பான் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சிம்பு படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.
மேலும், இந்த விவகாரத்தால் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இடையே பிரச்சனையும் ஏற்பட்டது.
இந்த நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக நேற்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. சிம்புவின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கலந்துக் கொண்டார். மேலும், சுபாஷ் சந்திரபோஷ், தேணாண்டாள் முரளி, சிவசங்கர் ஆகியோரிடம் சிம்பு வாங்கிய பணத்தை தானே அவர்களுக்கு வழங்குவதாக ஒப்புக் கொண்ட ஐசரி கணேஷ், மைக்கேல் ராயப்பனையும் அழைத்து பேசி தீர்வு காண்பதாக உறுதியளித்தாராம்.
ஐசரி கணேஷின் இந்த நடவடிக்கையில் சிம்புவின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை தயாரிப்பாளர்கள் சங்கம் நீங்கியிருப்பதோடு, அவருடைய படப்பிடிப்புக்கு பெப்ஸி தொழிலாளர்கள் ஒத்துழைப்பு தரலாம், என்றும் அறிவித்துள்ளது. இதனால், சிம்புவின் பிரச்சனை அனைத்தும் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அவருடைய ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.