Sep 07, 2021 07:08 AM

”நாங்க சி.வி.குமாரின் ரசிகர்கள்” - ‘ஜாங்கோ’ விழாவில் தயாரிப்பாளர்கள் பாராட்டு

”நாங்க சி.வி.குமாரின் ரசிகர்கள்” - ‘ஜாங்கோ’ விழாவில் தயாரிப்பாளர்கள் பாராட்டு

நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்களை தாண்டி, தங்களுக்கு என்று ரசிகர் வட்டத்தை உருவாக்கிய திரைப்பட தயாரிப்பாளர்கள், என்று பட்டியல் தயாரித்தால். அதில் ஒரு சிலர் மட்டுமே இடம் பிடிப்பார்கள். அந்த ஒரு சிலரில் தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு முக்கிய இடம் உண்டு. 

 

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சென் ஸ்டியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஜாங்கோ’.

 

இதுவரை இந்திய சினிமாவிலேயே சொல்லப்படாத டைம் லூப் என்ற வித்தியாசமான ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். 

 

டைம் டிராவல், பூர்வ ஜென்மம் போன்ற ஜானர்களில் பல படங்கள் வந்திருந்தாலும், டைம் லூப் என்ற அடிப்படையில் இதுவரை இந்திய சினிமாவிலேயே எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. அந்த அகையில், டைம் லூப் ஜானரில் வெளியாகும் முதல் படமான இப்படத்தில் குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழும் சம்பவங்களை, வித்தியாசமான திரைக்கதையுடன் சுவாரசியமான முறையில் படமாக்கப்பட்டுள்ளதாம்.

 

இதில் அறிமுக நடிகர் சதீஷ்குமார் நாயகனாக நடிக்க, நாயகியா டிக்டாக் புகழ் மிருணாளினி நடிக்கிறார். இவர்களுடன்

அனிதா சம்பத், ஹரீஷ் பேரடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக், டேனியல் அன் போப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். என் இதயா பாடல்கள் எழுதியுள்ளார்.

 

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர்கள் அனைவரும், தயாரிப்பாளர் சி.வி.குமார் படம் என்றாலே வித்தியாசமாக இருப்பதோடு, வியாபார ரீதியாகவும் வரவேற்பு பெறும். இப்படிப்பட்ட கதைகளை தொடர்ந்து தேர்வு செய்யும் சி.வி.குமாரின் கிரியேட்டிவிட்டிக்கு பலர் ரசிகர்களாக இருப்பது போல, தயாரிப்பாளர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாதையை வகுத்துக்கொண்டு அதில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அவருடைய வெற்றிப்பயண்ம் ‘ஜாங்கோ’ படத்திலும் தொடரும், என்று பாராட்டி பேசினார்கள்.