Oct 08, 2023 04:20 PM

பெண்கள் விடுதியில் நடக்கும் கிளுகிளுப்பான சம்பவம் ‘ரா...ரா...சரசுக்கு ரா...ரா...’!

பெண்கள் விடுதியில் நடக்கும் கிளுகிளுப்பான சம்பவம் ‘ரா...ரா...சரசுக்கு ரா...ரா...’!

ரஜினிகாந்தின் ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இடம்பெற்ற “ரா...ரா...சரசுக்கு ரா...ரா...” என்ற பாடல் வரிகள் மக்களிடம் மிக பிரபலமடைந்த நிலையில், தற்போது அந்த வார்த்தையை தலைப்பாக கொண்டு திரைப்பட்ம ஒன்று உருவாகி வருகிறது. 

ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ள இப்படத்தை கேஷவ் தெபுர் இயக்கியிருக்கிறார்.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஓரியா, பெங்காலி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் சுமார் 350 திரைப்படங்களில் நடன இயக்குநராக பணி புரிந்திருப்பவர் கேஷவ் தெபுர். பிரபு தேவா, நாட்டு நாட்டு பாடல் புகழ் பிரேம் ரக்‌ஷித், ராகவா லாரன்ஸ் போன்றவர்களிடம் உதவி நடன இயக்குநராகப் பணியாற்றிய கேஷவ் தெபுர், பல்வேறு மொழிகளில் சுமார் 2000 திரைப்படங்களில் நடனக் கலைஞராக பணியாற்றியிருக்கிறார்.

 

தற்போது இயக்குநராக அறிமுகமாகியுள்ள கேஷ தெபுர் தனது முதல் படத்திற்கு ’ரா...ரா...சரசுக்கு ரா...ரா...’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்.  இதில், கார்த்திக், காயத்ரி பட்டேல்  , KPY ஒய் பாலா , மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா ,அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி ,ஜெஃபி, ஜெயவாணி, அக்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்.ரமேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜி.கே.வி இசையமைத்திருக்கிறார். 

 

பெண்கள் விடுதிக்குள் நுழைந்த சில வாலிபர்கள் ஒரு குற்றத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அதில் இருந்து அவர்கள் வெளிவந்தார்களா?, இல்லையா? என்பதே படத்தின் மையக்கரு. அதற்கிடையே நடக்கும் பரபரப்பான, விறுவிறுப்பான மற்றும் கிளுகிளுப்பான சம்பவங்கள் தான் கதை செல்லும் பாதை. க்ரைம், ஆக்‌ஷன், ஹாரர் என அனைத்தும் நிறைந்த ஒரு படமாக உருவாகியிருக்கிறது.

 

இப்படம் பற்றி தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமி கூறுகையில், “இப்படத்தின் கதை ஒரே இரவில் நடக்கிறது. பெல்லாரி ராஜாவும் தாமோதரனும் அரசியலில் ஒன்றாக இருந்து பகைவர்களாக மாறியவர்கள். பெல்லாரி ராஜா அந்த தாமுவைக் கொன்று விடுகிறான். அதை நேரில் பார்த்த பெண் வீடியோ எடுத்து விடுகிறாள். அவளைத் துரத்துகிறது பெல்லாரியின் கும்பல். அவள் எஸ்.ஆர்.லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஓடிப் போகிறாள்.  லேடிஸ் ஹாஸ்டலுக்குள் இளைஞர்கள்  இரண்டு பேர் நுழைந்து விடுகிறார்கள். அங்குள்ள இரு பெண்களால் ஒரு கால் பாய் அழைக்கப்படுகிறான். ஆள் மாறாட்டக் குழப்பத்தில் ஒரு கொலை நடக்கிறது. இப்படி அடுத்தடுத்த கொலைகள் ,பரபரப்பு விறுவிறுப்பு கொண்ட பின்னணியில் இக்கதை உருவாகியுள்ளது.” என்றார்.

 

படத்தில் இடம்பெற்றுள்ள இக்கால இளைஞர்களும் யுவதிகளும் பேசும் அரட்டைகளும் , சுதந்திரமான காட்சிகளும் பார்த்து அதிர்ந்து போன சென்னை மண்டல தணிக்கை அதிகாரி 60 வெட்டுகள் கொடுத்திருந்தார். ஆனால் அதையும் மீறி  மும்பை சென்று மறு தணிக்கை செய்து வந்துள்ளார்கள். 

 

இப்படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ.ஜெயலட்சுமி  என்கிற பெண்மணி தைரியமாகத் தயாரித்துள்ளார். படத்துக்கான கதை பிடித்துப் போனதால் இப்படத்தைத் தயாரித்ததாக அவர் கூறுகிறார்.

 

வரும் நவம்பர் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தை 9வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.