Feb 06, 2018 10:34 AM

ரஜினிகாந்த் பிரதமராக வேண்டும் - சர்ச்சை இயக்குநரின் கருத்து!

ரஜினிகாந்த் பிரதமராக வேண்டும் - சர்ச்சை இயக்குநரின் கருத்து!

சினிமா பிரபலங்கள் அரசியலில் ஈடுபடுவது இந்தியாவில் சகஜமான ஒரு விஷம் தான் என்றாலும், தற்போதைய காலக்கட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த சினிமா பிரபலங்களும் அரசியலில் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

அரசியலே வேண்டாம், என்று சொல்லிக்கொண்டிருந்த நடிகர் கமல்ஹாசன் அரசியலில் இறங்கியதோடு, ஆளும் கட்சிக்கு எதிரான கருத்துக்களை கூறு அவ்வபோது பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், அரசியல் பிரவேசம் குறித்து, தானும் குழம்பி மக்களையும் குழப்பி வந்த ரஜினிகாந்த் கூட, தனி கட்சி தொடங்கி அதன் மூலம் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டார்.

 

இன்னும் 50 படங்களையே தாண்டாத இளம் நடிகர் விஷால் ஒரு பக்கம் அரசியலில் இறங்க, மறுபக்கம் நடிகர் விஜயும் அரசியலில் ஈடுபடுவதற்கான பணிகளை முடக்கிவிட்டிருக்கிறார். இவர்களுடன் நடிகர் சிம்புவும் விரைவில் அரசியலில் ஈடுபட இருப்பதாக கூரப்படுகிறது.

 

இப்படி தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் பலர் அரசியலில் ஈடுபடுவதற்கான பணிகளை மும்முரமாக செய்துவர, சமூக ஆர்வலகர்களில் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்.

 

இந்த நிலையில், ரஜினிகாந்த் முதல்வராவதை விட பிரதமரானார், இந்தியா அமெரிக்காவைப் போல மாறிவிடும், என்று சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

டிவிட்டர் பக்கத்தில் எதை பத்தியாவது, யாரை பத்தியாவது சர்ச்சையாக பதிவிட்டு வரும் ராம் கோபால் வர்மா, ரஜினி குறித்து பதிவிட்டிருப்பது, அவரை கேளி செய்யும் விதத்திலும் இருக்கிறது.

 

அவர் பதிவில், “ரஜினி முதல்வர் அல்ல, பிரதமர் ஆனால், இந்தியா, அமெரிக்காவைப் போன்று உருவாகும். மேலும், உலகம் முழுவதும் உள்ள 200 முக்கிய நாடுகளில் இந்தியாவின் பின்னணியில் ரஜினிகாந்த் இருந்தால் இந்தியா, அமெரிக்காவைப் போன்று உருவாகும். ரஜினியின் வெர்ஷன் 2.0 வில் இருந்து 200.0 வரை இருந்தால் இது சாத்தியமாகும்” என்று தெரிவித்துள்ளார்.