Nov 15, 2021 08:34 AM

’அண்ணாத்த’ தோல்வியால் முதலிடத்தை இழந்த ரஜினிகாந்த்

’அண்ணாத்த’ தோல்வியால் முதலிடத்தை இழந்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படம் ஆரம்பத்தில் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றாலும், படத்திற்கு எதிராக எழுந்த கடுமையான விமர்சனங்களால், நாளுக்கு நாள் வசூல் குறைய தொடங்கியது. மேலும், கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்ததாலும், அண்ணாத்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

 

இதற்கிடையே, ரஜினிகாந்தின் அடுத்த படம் பற்றிய பேச்சு வார்த்தை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குப் போவது யார்? என்ற கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் திலிப்குமார் உள்ளிட்ட சில இயக்குநர்கள் பெயர்கள் அடிபட்டாலும், இதுவரை இயக்குநர் முடிவாகவில்லையாம். ஆனால், இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கப் போகிறதாம்.

 

இந்த நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படத்தையும் தயாரிக்க இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வழங்கிய சம்பள தொகை ரூ.100 கோடியை புதிய படத்திற்கும் வழங்க முடியாது, என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாம்.

 

படம் தோல்வியடைந்ததால், புதிய படத்தில் ரஜினிக்கு சம்பளமாக ரூ.70 கோடி மட்டுமே வழங்கப்படும் என்றும் சன் பிக்சர்ஸ் சம்பள தொகையை நிர்ணயித்துவிட, ரஜினிகாந்தும் அதை ஏற்றுக்கொண்டு நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம்.

 

ரூ.100 கோடி சம்பளம் ரூ.70 கோடியாக குறைந்ததால், இந்திய சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரஜினிகாந்த் தற்போது இந்த இடத்தை இழந்துள்ளார்.