Mar 06, 2024 10:05 AM
ஜான்வி கபூருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ‘ஆர்.சி 16’ படக்குழுவினர்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரணின் புதிய படத்தை ‘உப்பென்னா’ புகழ் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்குகிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தை தற்காலிகமாக ‘ஆர்.சி 16’ என்று அழைக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்க, விருத்தி சினிமாஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்கள் சார்பில் வெங்கட சதீஷ் கிலாறு தயாரிப்பில் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார்.
இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆர்.சி 16 படக்குழு அவரை வரவேற்றதுடன், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்து, புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது.