Dec 18, 2021 05:18 PM

சினிமா நிகழ்வில் வைக்கப்பட்ட கோரிக்கை! - வைரலான ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’

சினிமா நிகழ்வில் வைக்கப்பட்ட கோரிக்கை! - வைரலான ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’

கோலிவுட்டில் நடந்த சமீபத்திய பாடல் வெளியிட்டு விழா பற்றிய செய்தி தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காகியிருப்பதோடு, தமிழக அரசு ஏரியாவிலும் வைரலாகி வருகிறது.

 

நபீஹா மூவிஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரிப்பில், மகேஷ் பத்மநாபன் எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’. அறிமுக நடிகர் ருத்ரா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக சுபிக்‌ஷா நடித்துள்ளார். இவர்களுடன் சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

பிஜு விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜேஷ் அப்புக்குட்டன், ருத்ரா ஆகியோர் இசையமைத்துள்ளனர். கட்டளை ஜெயா பாடல்கள் எழுதியுள்ளார்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 17 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதோடு, பாடல்களையும், டிரைலரையும் பாராட்ட்டினார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், திரைப்பட படப்பிடிப்புகளுக்காக தமிழகத்தின் ஒரு இடத்தில் அனுமதி பெற்றால் அதை வைத்துகொண்டு பல இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசு அனுமதியளிக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தார்.

 

அவருடைய இந்த பேச்சு தற்போது வைரலாகி வருவதோடு, கே.ராஜன் அவர்கள் வைத்த கோரிக்கை தமிழக அரசு ஏரியாவிலும் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, செய்தி தொலைக்காட்சிகளிலும் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படத்தின் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.

 

இளைஞர்களை கவரும் விதத்தில் முழுமையான காதல் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தில், இளைஞர்களுக்கான மிக முக்கியமான மெசஜ் ஒன்றும் இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

 

பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், படம் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.