பணத்திற்காக இப்படி செய்தாரா சமந்தா?
தமிழகத்தைச் சேர்ந்த நடிகை சமந்தா, தமிழ் சினிமா மூலம் நடிகையாக அறிமுகமாகி பிறகு முன்னணி நடிகையாக உயர்ந்தவர் தற்போது தெலுங்கு நடிகை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு ஆந்திர மாநிலத்தில் செட்டிலானவர், தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, சமந்தா நடிப்பில் உருவான ’தி பேமிலி மேன் 2’ வெப் தொடர், தமிழர்களை இழிவாக சித்தரித்திருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொச்சை படுத்தியிருப்பதாகவும் கூறி தமிழ் உணர்வாளர்கள் அத்தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தொடரை நிறுத்த வேண்டும், என்று மத்திய அரரை வலியுறுத்தினார்கள்.
ஆனால், தமிழர்களின் குரலை தமிழக அரசு புரம் தள்ளியதால், தி பேமிலி மேன் 2 வெப் தொடர் வெளியானது. தொடர் வெளியான பிறகும் அத்தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், அமேசான் நிறுவனத்திற்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்படும், என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், தமிழர்களை இழிவாக காட்ட வேண்டும், என்பதற்காகவே தி பேமிலி மேன் 2 தொடர் கதையை எழுதியிருக்கும் வட இந்தியர்கள் இரு பக்கம் இருந்தாலும், தொடரில் நடித்த சமந்தா, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல், தொடர் குறித்து பெறுமையாக பேசிக்கொண்டிருக்கிறார். இதனால், சமந்தாவை இனி தமிழ்ப் படங்களில் நடிக்க வைக்க கூடாது, என்ற எதிர்ப்பு முழக்கங்களும் தமிழகத்தில் ஒலித்து வருகிறது.
இந்த நிலையில், தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடிப்பதற்காக சமந்தாவுக்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக திரைப்படங்களில் நடிக்க சமந்தா ரூ.1 முதல் ரூ.1.30 கோடி சம்பளமாக பெறுவாராம். ஆனால், இந்த வெப் தொடருக்கு அவருக்கு மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தான் சமந்தா, தி பேமிலி மேன் 2 தொடருக்கு எதிராக தமிழர்கள் குரல் கொடுத்தையும், தமிழர்கள் பற்றியும் கண்டுக்கொள்ளவில்லை, என்று கூறப்படுகிறது.