Mar 19, 2022 03:19 AM

விஜயின் 66 வது படத்தின் கதாநாயகி இவர் தான்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜயின் 66 வது படத்தின் கதாநாயகி இவர் தான்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், படம் விரைவில் வெளியாக உள்ளது. அப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் ஆரம்ப வேலைகள் தற்போது தொடங்கியிருக்கிறது.

 

விஜயின் 66 வது திரைப்படமாக உருவாகும் அப்படத்தை பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வெளியானது. மேலும், படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில், விஜயின் 66 வது படத்தில் அவருக்கு ஜோடியாக  தென்னிந்திய சினிமாவின் வைரல் நாயகியாக உருவெடுத்துள்ள ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். இதனை படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்தார்.

 

Rashmika