Apr 12, 2025 04:53 PM

தமிழ்நாடு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு சார்பில் குறும்பட வெளியீட்டு விழா!

தமிழ்நாடு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு சார்பில் குறும்பட வெளியீட்டு விழா!

இந்நிகழ்ச்சியில்  ’டைமுக்கு சாப்பிடு பை பாத்திமா’ என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. நவீன், ஜெயந்தி , சுதா மற்றும் அனு ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்திருக்கின்றனர்.

இக்குறும்படத்தை லியோ ஜூட் இயக்கியுள்ளார். நவீன்ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ராக்கி இசையமைத்துள்ளார்.

 

குறும்படம் என்றாலே மெசேஜ் சொல்வதை வாடிக்கையாக வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம், ஆனால் உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் மெசேஜ் உட்பட அழகான திரைக்கதையில் பார்ப்பவர்களை நெஞ்சை நெகிழ வைக்க வைக்கும் வகையில் காட்சிப்படுத்தி உள்ளனர்.

 

குறும்படத்தை இயக்கிய இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஏடிஜிபி திரு.அமல்ராஜ் ஐபிஎஸ்  கௌரவித்தார்.

 

விழாவில் பேசிய அவர் போதைப்பொருள் ஒழிப்பில் தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு போலீசாரும் முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். 

 

இந்த குறும் படத்தின் இயக்குனர் லியோ ஜூட் 20 ஆண்டுகளுக்கு மேலாக க்ரைம் மற்றும் அரசியல் பத்திரிகையாளராக என்.டி.டி.வி முதல் முன்னணி  தொலைக்காட்சி நிறுவனங்களில் தலைமை செய்தியாளராக பணி செய்துள்ளார். திரைத்துறை மேல் உள்ள ஆசையால் பணியைத் துறந்து ப்ளூ பிக்ஸ்  நியூஸ் என்ற  நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் நுழைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த மாபெரும் சாதனையை டாக்குமென்டரி படமாக எடுத்து அதை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு பாராட்டு தெரிவித்து இருந்தார்.

 

மேலும் 10க்கும் மேற்பட்ட குறும்படங்களை  தமிழ்நாடு காவல்துறைக்கு இந்நிறுவனம் எடுத்துக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.