’தக் லைஃப்’ படத்தில் இணைந்த சிலம்பரசன் டி.ஆர்!

987 ஆம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இனைந்திருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாள் முதல் படத்தின் மீதான எதிரபார்ப்பு அதிகரித்து வருவதோடு, படத்தில் நடிக்க இருக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்பாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்களு உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர், நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து சிம்பு இடம்பெறும் அதிரடியான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட்ஜ் ஜெயண்ட் மூவிஸ், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்கள்.
இப்படத்தின் கதை என்னவாக இருக்கும்? என்பதை அறிந்துக் கொள்வதில் ரசிகர்கள் பேரார்வம் காட்ட,டீசர் மற்றும் கமல்ஹாசனின் முதல் பார்வை போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு இந்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.