சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் திறக்கிறார்!
நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு கட்டியுள்ள மணீமண்டபத்தின் திறப்பு விழா வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், மணிமண்டப திறப்பு விழாவில் முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற மாட்டார்கள் என்றும், மணிமண்டபத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைப்பார் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
அரசின் இந்த அறிவிப்பால் சிவாஜி கணேசனின் குடும்பத்தார் அதிருப்தி அடைந்ததோடு, மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க வேண்டும், என்று தென்னிந்திய நடிகர்கள் சங்கமும் வேண்டுகோள் விடுத்தது.
இந்த நிலையில், சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திறந்து வைப்பார், என்பதை சற்று முன்பாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளின்படியும், கலைத்துறையினரின் கோரிக்கைகளின்படியும் 1.10.2017 அன்று நடிகர் திலாகம் சிவாஜி கணேசன் அவர்களது மணிமண்டபத்தை தமிழக அரசின் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் திறந்து வைப்பார்கள். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்கள் தலைமை வகிக்கவும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமடைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் முன்னிலை வகிப்பார் என தெரிவித்துக்கொள்கிறேன்.
விழா ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து உடனடியாக மேற்கொள்ள ஆணையிட்டுள்ளேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.