Apr 10, 2025 04:18 AM

’ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் உலக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய சிவகார்த்திகேயன்!

’ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் உலக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய சிவகார்த்திகேயன்!

பிளேஸ்மித் ஸ்டுடியோஸ் (PLAYSMITH STUDIOS) சார்பில் எஸ்.விஜய பிரகாஷ் தயாரிப்பில், சவுத் ஸ்டுடியோஸ் சார்பில் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் இணை தயாரிப்பில், இயக்குநர் டி.ராஜவே எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. 

 

கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருக்கும் இப்படத்தில் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

 

இப்படத்தை பார்த்த ந் அடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவை வெகுவாக பாராட்டியதோடு, இப்படத்தின் உலக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மூலம் உலகம் முழுவதும்  விரைவில் வெளியிட உள்ளார்.