Dec 16, 2024 03:41 PM

’பொன்னியின் செல்வன்’ நடிகையுடன் ஜோடி போடும் சூரி!

’பொன்னியின் செல்வன்’ நடிகையுடன் ஜோடி போடும் சூரி!

‘கருடன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பாளர் கே.குமார், தனது லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் மீண்டும் சூரியை ன்வைத்து தயாரிக்கிறார். ‘மாமன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

 

‘விலங்கு’ இணையத் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியன் இயக்கும் இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கவர்ச்சியில் கிரங்கடித்த முன்னணி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

 

ஹேசம் அப்துல் வஹாப் இசையமைக்கும் இப்படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.துரை ராஜ் கலை இயக்குநராக பணியாற்ற, கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்கிறார். மகேஷ் மேத்யூ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

Maaman Movie Pooja