Jun 13, 2023 06:23 AM

இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.6.50 கோடி நிதி வழங்கிய சுபாஸ்கரன்!

இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.6.50 கோடி நிதி வழங்கிய சுபாஸ்கரன்!

இந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன், இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து முயற்சித்து வந்தார்.

 

இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்புகளை மேற்கொண்டு விடாமுயற்சியுடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அல்லிராஜா சுபாஸ்கரன் வழிவகை செய்துள்ளார். அவரது முயற்சியால் 26 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும், விடுதலை செய்யப்பட்ட 26 தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில், லைகா குழுமத்தின் நிறுவனரும், தலைவரும் லைகா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா ரூ. 25 என மொத்தம் ரூ.6.50 கோடியை சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கியுள்ளார். 

 

இந்த நிகழ்வில் லைகா குழும உப தலைவர் பிரேம் சிவசாமி மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.