Nov 03, 2022 06:16 PM

சன்னி லியோன் மனித நேயம் மிக்கவர் - பிரபலங்கள் பாராட்டு

சன்னி லியோன் மனித நேயம் மிக்கவர் - பிரபலங்கள் பாராட்டு

சன்னி லியோன் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் ‘ஓ மை கோஸ்ட்’. இதில் சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

வவு மீடியா எண்டர்டெயின்மெண்ட் ( VAU MEDIA ENTERTAINMENT) சார்பில் டி.வீர சக்தி மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் (WHITE HORSE STUDIOS) சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை யுவன் இயக்கியுள்ளார். தீபக் டி.மேனன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார்.

 

வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள  ஹாரர் காமெடி  ஜானர் திரைப்படமான ‘ஓ மை கோஸ்ட்’-ன் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இசை மற்றும் நடன நிகழ்ச்சியோடு கோலாகலமாக மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் கதையின் நாயகி சன்னி லியோன் உள்ளிட்ட படக்குழுவினருடன் ஏராளமான திரையுல பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சதீஷ், “இந்த படத்தின் கதையை இயக்குநர் கூறியபோது, அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அதில் சன்னி லியோன் நடிக்கிறார் என்ற உடன், நான் இந்த படத்தில் நடிக்க ஒத்து கொண்டேன். சன்னி லியோன் ஒரு சிறந்த மனிதநேயம் மிக்க நபர், அவரை நெருங்கவே நாங்கள் தயங்கி கொண்டு இருந்தோம். ஆனால் அவர் இலகுவாக மிக இயல்பாக எங்களிடம் பழகினார். அவர் இந்த படத்தில் மிகப்பெரிய அர்பணிப்பை கொடுத்துள்ளார். சிறப்பாக நடித்துள்ளார். அனைவரும் கடின உழைப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “நடிகை சன்னி   லியோன்  மனிதநேயமிக்க  நபர்.  இந்த படம் பற்றி சதீஷ் என்னிடம் கூறியபோது, ஒரு வெற்றி படத்திற்கான அனைத்து அம்சமும் இந்த படத்தில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. டார்க் காமெடி திரைப்படங்கள் இப்போது அதிகமாக  வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் ஹாரர் உடன் கலந்த டார்க் காமெடி திரைப்படம். படம் நன்றாக வந்துள்ளது. ஒரு புதிய தயாரிப்பாளர் நமது திரைத்துறைக்கு வந்து இருக்கிறார். அவரை வரவேற்க வேண்டியது நமது கடமை. இந்த திரைப்படம்  வெற்றியடைந்தது, இதில் பங்கேற்று இருக்கும் அனைவருக்கும் வெற்றி படமாக இது  அமைய வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் தங்கர் பச்சான் பேசுகையில், “இப்பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தை நான் இயக்குகிறேன். இந்த படமும், இந்த தயாரிப்பாளர் எடுக்கும் அடுத்த படமும் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் படமாக இருக்கும்.  திரைப்படங்கள் மக்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு அங்கமாக திகழ்கிறது. ஊடகங்கள் சிறிய திரைப்படங்களுக்கு ஆதரவு தர வேண்டும். நேர்மையான விமர்சனம் தான் திரைப்படத்திற்கு தேவை. மண் சார்ந்த திரைப்படங்களை நாம் எடுக்க வேண்டும். அப்படிபட்ட திரைப்படங்களை எடுக்கும், இயக்குநர்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த  திரைப்படம் வெற்றியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.

 

ஜிபி முத்து பேசுகையில், “இது தான் எனது முதல் திரைப்படம், முன் அனுபவம் இல்லாத எனக்கு, இயக்குநர் தான் பக்கபலமாக இருந்தார். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தில் எனக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்துள்ளனர். அந்த பாத்திரம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்கு தேவை. அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

Oh My Ghost Audio Release

 

நடிகை சன்னி லியோன் பேசுகையில், “தமிழகம்  வந்து உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், அன்பும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. OMG திரைப்படத்திற்காக அனைவரும் கடின உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்துள்ளோம்.  இந்த படத்தை பார்க்க உங்களது நேரத்தையும் பணத்தையும் நீங்கள் ஒதுக்குவதற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். எங்களது கனவை நீங்கள் பார்க்க போகிறீர்கள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை.” என்றார்.

 

தயாரிப்பாளர் வீர சக்தி பேசுகையில், “இந்த படம் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த ஒரு கதை. முதல் பாதி காமெடியும், இரண்டாவது பாதி சன்னி லியோன் வரும் பிரம்மாண்டமும் படத்தில் நிறைந்து இருக்கும். நீங்கள் ரசிக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். நடிகர்கள், இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை.” என்றார்.

 

தயாரிப்பாளர் கே.சசிகுமார் பேசுகையில், “இப்படம் பற்றி அண்ணன் அனைத்தையும் கூறி விட்டார். இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு படமாக இருக்கும். அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படம் விரைவில் திரைக்கு வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் யுவன் பேசுகையில், “தயாரிப்பாளர் மிக தீவிரமான சினிமா ரசிகர், அவரிடம் கதை சொன்ன போதே இந்தப்படத்தை வேறு உயரத்திற்கு கொண்டு சென்று விடுவார் என நம்பிக்கை வந்தது. இந்தப்படம் சன்னி லியோன் வந்த பிறகு தான் மிகப்பெரிய படமாக மாறியது. மொழி தெரியாமல் மிக அர்ப்பணிப்புடன் கற்றுக்கொண்டு நடித்தார். அவருடன் வேலை பார்க்க மிக எளிதாக இருந்தது. சதீஷ் மிக அற்புதமாக நடித்துள்ளார். படத்தில் அனைவருமே கடினமாக உழைத்துள்ளார்கள். கண்டிப்பாக அனைவரும் திரும்ப திரும்ப பார்க்கும் படியான படமாக இருக்கும்.” என்றார்.

 

அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.